திமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி !

சென்னையில் பள்ளிக்கரணை அருகே அதிமுக கட்சியின் பிரமுகர் இல்ல திருமணத்திற்கு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் . பேனர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருந்தது. பேனர்கள் , கட் அவுட்கள் வைக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இதன் பிறகு அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகளும் விதிகளை மீறி பேனர்களை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தங்களின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர்.
இத்தனை நடந்தும் அரசியல் கட்சியினர் பேனர்கள், கட் அவுட்கள் , அலங்கார வளைவுகளை வைப்பதை நிறுத்தியபாடில்லை. சீன அதிபர் மாமல்லபுரத்திற்கு வருகை தரும் நேரத்தில் பேனர்களை வைக்க அனுமதிக்குமாறு தமிழக அரசு உயர் நீதிமன்றத்தை நாடியது. அது கண்டனங்களையும் பெற்றது.
தற்பொழுது திமுக கட்சி சார்பாக வைக்கப்பட்ட அலங்கார வளைவு ஒன்று முழுவதுமாக சாலையில் சாய்ந்து விழும் காட்சிகள் இடம்பெறும் வீடியோ முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் எங்கு நிகழ்ந்தது என்பது குறித்து தேடினோம்.
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட துறையூர் வழுதாவூர் சாலையில் வைக்கப்பட்டிருந்த திமுகவின் வரவேற்பு வளைவு சாலையில் சரிந்து விழும் காட்சி @arivalayam @Udhaystalin pic.twitter.com/AU59GAZFAv
— Lingam S Arunachalam (@as_lingam) October 21, 2019
சங்கர் எல் அருணாச்சலம் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு, ” விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட துறையூர் வழுதாவூர் சாலையில் வைக்கப்பட்டிருந்த திமுகவின் வரவேற்பு வளைவு சாலையில் சரிந்து விழும் காட்சி ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி பிரச்சாரங்கள் நடைபெற்றன. கட்சி சார்பில் வைக்கப்பட்ட அலங்கார வளைவு விழுந்து யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஒரு பைக் மட்டும் சேதமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் காற்றில் பறப்பது போல்…அவர்கள் கட்சியின் அலங்கார வளைவும் காற்றில் பறக்கிறது.. இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் .
Links
https://web.archive.org/web/20191021111445/https://twitter.com/as_lingam/status
tamil-nadu/dmk-decorative-arch-collapsed-san
https://tamil.indianexpress.com/viral/dmks-decorative-arch-slide-at-road-in-vikravandi-viral-video/