“டிராகன் மேன்” எனும் மனித இனத்தின் புதிய மூதாதையரை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல்!

கடந்த இரண்டு மில்லியன் ஆண்டுகளில் நம்மைப் போன்றே பல விதமான மனித இனங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து வந்துள்ளனர். சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் நவீன மனிதர்களும் பிற மனித இனங்களும் ஒன்றாக வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் உண்டு.

Advertisement

ஹோமோ எரெக்டஸ், ஹோமோ ஹபிலிஸ், நியண்டர்டால்ஸ் என 20 லட்சம் ஆண்டுகளுக்கு மேலான நம் ஹோமினின் இனப் பரிணாம வளர்ச்சியில் மீதம் உள்ளவர்கள் ஹோமோ சபியன்ஸ் எனப்படும் நாம் தான். நமக்கு மிக நெருங்கிய ஒற்றுமையில் இருக்கும் வகை நியண்டர்டால்ஸ். ஆனால் அவற்றை விட மனித குடும்பத்தின் நெருங்கிய தொடர்பு உடைய புதிய இனத்தை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இது 1933 ஆம் ஆண்டில் சீனத் தொழிலாளர்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது வடகிழக்கு சீனாவில் 1933 இல் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் ஹார்பின் நகரத்திற்கு அருகே கண்டறியப்பட்ட ஒரு மண்டையோடு , ஜப்பானியர்களிடம் சிக்காமல் இருக்க ஒரு கைவிடப்பட்ட கிணற்றில் மூடப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது, அதை மறைத்த நபர் இறப்பதற்கு சில தினங்கள் முன்பு இதைப்பற்றி தனது பேரனிடம் சொன்ன பின்னர் 2018 ஆம் ஆண்டு இது மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. அடர்த்தியான புருவம், பெரிய பற்கள்,சதுர வடிவ கண் குளிகளுடன் கூடிய இந்த புதைப்படிவ மண்டை ஓட்டை தற்போது ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இது குறித்தான ஆராய்ச்சிகள் சீன, ஆஸ்திரேலிய மற்றும் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்களின் குழுவால் மேற்கொள்ளப்பட்டு கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது “ஹோமோ லாங்கி” அல்லது “டிராகன் மேன்” என சீன ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படும் இந்த மண்டை ஓடு, புவி வேதியியல் நுட்பங்கள் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு அதன் எலும்புகள் குறைந்தது 1,46,000 ஆண்டுகள் பழமையானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டை ஓடு பழமையான மற்றும் நவீன அம்சங்களின் தனித்துவமான கலவையைக் கொண்டுள்ளது என்றும் நம் முகக் கூறுகளுடன் ஒத்துப்பூவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

சுமார் 9 அங்குல நீளமும் 6 அங்குலங்களுக்கும் அதிகமான அகலமும் கொண்ட இந்த மண்டை ஓடு, ஒரு நவீன மனிதனின் அளவிற்கு ஒத்த ஒரு மூளையை வைத்திருக்க போதுமானதாக இருக்கும் என கூறியுள்ளனர். ஆராய்ச்சியில் இது சுமார் 50 வயதுடைய ஒரு ஆணின் மண்டை ஓடாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதிக அளவு காற்றை சுவாசிக்க அனுமதிக்க கூடிய அவரது பரந்த மூக்கு ஒரு உயர் ஆற்றல் கொண்ட வாழ்க்கை முறையைக் குறிக்கிறது என்றும் அவரின் பெரிய உடலமைப்பு கொடூரமான குளிர்காலத்தை எதிர்கொள்ள அவருக்கு உதவியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ப்ரிமாட்டாலஜி மற்றும் பேலியோஆன்ட்ரோபாலஜி பேராசிரியரும், இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளரான ஜிஜுன் நி (Xijun Ni) இது குறித்து கூறியதாவது, ” நியண்டர்டால் எனும் அழிந்துபோன வகை தான் நம்முடைய நெருங்கிய உறவாக இருந்து வந்தது. எவ்வாறாயினும் ஹோமோ லாங்கி என அழைக்கப்படும் இந்த புதிய வம்சாவளி தான் ஹோமோ சேபியன்களின் உண்மையான சகோதரக் குழு என்று எங்கள் கண்டுபிடிப்பு தெரிவிக்கிறது.”

“இவை கட்டுமஸ்தான தோற்றத்துடன் , வலிமையாக உள்ளது. இவற்றின் உயரத்தை மதிப்பிடுவது கடினம், ஆனால் பெரிய தலை கொண்ட இவை நவீன மனிதர்களின் சராசரியை விட அதிக உயரத்துடன் தான் பொருந்த வேண்டும்.” என தெரிவித்தார்.

Advertisement

மனித வரலாற்றில் இந்த தனிநபரின் மண்டையோடு எங்கு பொருத்தப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள, விஞ்ஞானிகள் புதைப்படிவத்திலிருந்து எடுக்கப்பட்ட இதன் அளவீடுகளையும், பிற சீன மக்களின் 95 மண்டை ஓடுகளையும் மென்பொருள் உதவியுடன் தொகுத்து பார்த்துள்ளனர். அதன் முடிவில் இந்த மண்டையோடு நியண்டர்டால்களை விட நவீன மனிதர்களுக்கு நெருக்கமான ஒரு புதிய கிளையை உருவாக்கியுள்ளது.

சீன ஆராய்ச்சியாளர்கள் இந்த மண்டை ஓடு ஒரு புதிய இனமாக இருப்பதற்கு போதுமான தரவுகள் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளின் மற்றொரு ஆசிரியரான கிறிஸ் ஸ்ட்ரிங்கர் இதை ஏற்க மறுக்கிறார். இது 1978 ஆம் ஆண்டில் சீனாவின் டாலி கவுண்டியில் காணப்பட்ட மண்டை ஓடைப் போன்று உள்ளது என்று அவர் நம்புகிறார்.

“நான் இதை ஹோமோ டாலியென்சிஸ் என்று அழைக்க விரும்புகிறேன், ஆனால் அது பெரிய விஷயமல்ல” என்று அவர் கூறியுள்ளார்.

Links :

https://www.google.com/amp/s/www.nbcnews.com/news/amp/ncna1272409

ancient-skull-from-china-could-be-new-species-dragon-man

massive-human-head-in-chinese-well-forces-scientists-to-rethink-evolution

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button