ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்.. பாஜக அரசியலுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் !

2022 டிசம்பர் 31ம் வரை ஒன்றிய அமைச்சகத்தின் செயலாளராகப் பதவிக் காலம் இருக்கும் அருண் கோயல் விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ன்றிய கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அருண் கோயல் கடந்த நவம்பர் 18ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். ஆனால், அதற்கு அடுத்தநாள் நவம்பர் 19ம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 21ம் தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்று இருக்கிறார்.

இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நபர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அவசர அவசரமாக ஒன்றிய அரசின் செயலாளர் அருண் கோயலை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது குறித்து ஒன்றிய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.

கடந்த 2022 மே மாதத்தில் இருந்து காலியாக இருந்த தேர்தல் ஆணையரின் பதவியைக் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் அவசரமாக நியமிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

மேலும், தேர்தல் ஆணையரின் பதவிக்காக ஒன்றிய சட்டத்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட 4 நபர்களின் பெயர்களும் எந்த அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டது போன்ற கேள்விகளும் உச்ச நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டது.

அரசியல் சாசன விதிகளின்படி, தேர்தல் ஆணையராக நியமிக்கப்படும் நபர் 6 ஆண்டுகள் அல்லது அவருக்கு 65 வயது பூர்த்தியடையும் வரை அந்தப் பதவியில் இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது ஆளும் பாஜக அரசால் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படும் அருண் கோயல் 6 ஆண்டுகள் பூர்த்திச் செய்யும்படி இல்லை.

குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் ஒன்றிய அமைச்சகத்தில் செயலாளராக இருந்த ஒருவரை அவசரம் அவசரமாகத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத் தன்மையைக் கெடுக்கும் விதமாக உள்ளது.

எந்த அரசியல் இடையூறும் இன்றித் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையரின் பதவியை ஒன்றிய அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அருண் கோயல் என்பவரை இரண்டு நாளில் எந்த மதிப்பீடும் செய்யாமல் பாஜக அரசு நியமித்துள்ளது.

மற்ற பதவிகள் : 

பாஜக அரசு தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை முக்கியப் பொறுப்புகளில் நியமிப்பது அல்லது அவர்களது பணி காலத்தை நீட்டிப்புச் செய்வது என்பது புதிதல்ல.

 

அமலாக்கத்துறையின் தலைவராக இருந்த சஞ்சய் குமார் மிஸ்ரா ஓய்வு பெற வேண்டிய ஒரு நாளைக்கு முன் அவருடைய பதவி காலம் 2022 நவம்பர் 17ம் தேதி அன்று பாஜக அரசால் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. அமலாக்கத்துறையின் தலைவராக இருக்கும் சஞ்சய் குமாரின் பதவிக் காலம் நீடிக்கப்படுவது இது 3வது முறையாகும். அமலாக்கத்துறையில் தலைவர் பொறுப்பில் வகிக்க வேறு எந்த அதிகாரிகளுக்கும் தகுதி இல்லையா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

அமலாக்கத்துறையைக் கையில் வைத்துக்கொண்டு எதிர் கட்சியினர் மீதும், எதிர் கருத்துகள் வைப்பவர்கள் மீதும் ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுப்பது அனைவரும் அறிந்ததே.

இதுமட்டுமின்றி, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த வினய் கவாதரா என்பவரின் பதவிக்காலம் 16 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அமைச்சகத்தின் செயலாளராக இருந்த ராஜீவ் கவுபா என்பவரின் பதவிக்காலம் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே பதவியில் இது இரண்டாவது நீட்டிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அஜய் குமார் பல்லா என்பவரின் பதிவிக்கலாம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 3வது முறையாக அஜய் குமாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரமாக வெளிப்படைத்தன்மையுடன் எந்தவித அரசியல் தலையீடுகளும் இன்றி செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையத்தின் பதவியை எந்தவித வெளிப்படைத்தன்மையும் இன்றி அவசர அவசரமாக எந்த மதிப்பீடும் செய்யாமல் நியமிக்கப்படுவது ஆளும் பாஜக அரசுக்கே சாதகமாக அமையும்.

ஆளும் பாஜக அரசுக்கு சாதகமான அதிகாரிகளை முக்கியமான அரசியல் சாசன பொறுப்புகளில் அமர வைப்பது ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்று.

 

Links : 

Cabinet Secretary Rajiv Gauba gets one-year extension

is-it-done-in-such-haste-with-such-tearing-urgency-sc-questions-govt-on-new-ecs-appointment

Please complete the required fields.




Back to top button
loader