திணறும் தேர்தல் ஆணையம் | என்ன நடந்தது ?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மனோரஞ்சன் ராய் என்பவர் பெற்ற தகவல் தேர்தல் ஆணையத்தை முழிக்க வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் எத்தனை வாக்கு செலுத்தும் இயந்திரம் யார் யாரிடமிருந்து பெறப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையம் சுமார் 10 லட்சம் எந்திரம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் இருந்து பெற்றதாகவும், சுமார் 10 லட்சம் எந்திரம் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவிடம் இருந்து பெற்றதாகவும் தகவல் தர.

Advertisement

ஆனால் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் சுமார் 19 லட்சத்திற்கும் மேற்பட்ட இயந்திரங்களை வழங்கியதாகவும், எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா சுமார் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட எந்திரங்களை தந்ததாக குறிப்பிட சர்ச்சை தொற்றிக்கொள்கிறது.

தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் இவற்றை தனித்தனியே பெற்றுக்கொண்டு பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்படுகிறது. அது 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொடுக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், இது பாதி உண்மையை அடிப்படையாக வைத்து தொடுக்கப்பட்டிருந்த வழக்கு என்று சொன்னது.

காணாமல் போனதாக சொல்லப்படுகிற எந்திரங்களின் எண்ணிக்கை சுமார் 19 லட்சம், அதன் விலை 100 கோடிக்கும் மேல். ஒருவேளை அதிகமான இயந்திரங்களை பெற்றதாக கணக்கு காட்டி ஊழல் நடந்ததா அல்லது முறைகேடுகளுக்கு பயன்படுத்துவதற்காக இது செய்யப்பட்டதா என்று இரு கேள்விகள் பிறக்கின்றன.

1980களில் இருந்து தற்போது 2015 வரை பெறப்பட்ட எந்திரங்களின் எண்ணிக்கை தான் இது. ஆக ஒருவேளை எந்திரங்களில் முறைகேடு என்று இருந்தாலும் கூட இது முற்றிலும் பாஜக அரசாங்கம் மட்டும் செய்ததாக ஒரு முடிவுக்கு வர இயலாது.

தி குயின்ட பத்திரிகையின் வேறு ஒரு செய்தியும் இதே போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. அது பல வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை விட எண்ணிய வாக்குகள் அதிகமாக இருக்கிறது என்பதையும், அந்த குற்றச்சாட்டு குறிப்பாக தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், தர்மபுரி மூன்றிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவானதை விட அதிகமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டது அந்தப் பத்திரிகை.

இது ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல். அதிலும் இது முழுமையான இறுதி தகவல் குறிப்பிடப்பட்ட தொகுதிகளில் மட்டும் பார்த்தோம் என்று குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அவர்கள் தொடர்பு கொண்ட போது தேர்தல் ஆணையம் பதிலளிக்க சில நேரம் ஆகும் என்று சொல்லி அதற்குள் இறுதியான தகவல் என்கின்ற வார்த்தையை நீக்கியுள்ளது. பின்பு பதிலளித்த தேர்தல் ஆணையம் இது இறுதியான தகவல் அல்ல. இதில் மேலும் திருத்தங்கள் செய்யப்படும் என்று பதிலளித்தது.

Advertisement

ஏன் இறுதியான தகவல் என்று குறிப்பிட்டிருந்ததை நீக்கினீர்கள் என்ற கேள்விக்கும் அவர்களிடம் முறையான பதில் இல்லை. தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகளை இது தொடர்பாக சந்திக்க வேண்டும் என்று சொன்னதற்கும் அவர்களிடம் பதில் இல்லை. இது தொடர்பான தகவல்களை நீக்கியுள்ளனர். எண்ணிக்கை முடிந்து அங்கு பல நாட்களுக்குப் பின்பும் எப்படி தவறான தகவல் இருக்கும் என்று அப்பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம் மொத்தம் 91 கோடி வாக்காளர்கள், அதில் சரியான தகவலை திரட்ட போதுமான அவகாசம் வேண்டும், இதற்கு முந்தைய தேர்தலில் முழு தகவலை தருவதற்கு சில மாதங்கள் கூட ஆகியது. அதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் தற்போதைய தேர்தலில் தகவலை விரைந்து தர வேண்டும் என்கிற நோக்கில் தொழில்நுட்ப உதவியோடு தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கையின் காரணமாக விரைந்து கொடுத்துள்ளோம். இதில் எந்த முறைகேடும் இல்லை வாக்களித்தது அனைவரும் மனிதர்கள் தான் என்று பதில் அளித்து இருந்தது.

இவ்விரண்டும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. முறையாகத்தான் தேர்தல் நடந்ததா என்ற கேள்விகள் பிறப்பதற்கான காரணம் இந்த இரண்டு சம்பவங்களுமே. இது கவனக் குறைவின் காரணமாக நடந்தாலும் கூட கேள்விக்கு உட்பட வேண்டியதும், ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியதாக மாறியுள்ளது.

ஏனென்றால் 20 லட்சம் மிஷின்கள் என்பதும், பதிவான ஓட்டில் குளறுபடி என்பதும் எளிதாக கடந்து போகக் கூடிய விஷயம் அல்ல ஜனநாயக நாட்டில். இது தவிர பல்வேறு புகைப்படங்கள் தகவல்கள் காணொளிகள் வெளியானதில் பலவும் பழைய அல்லது போலியான தகவல்கள் ஆக இருந்துள்ளது அதைப்பற்றி நாம் எழுதியதை படிக்கலாம்.

இந்த லிங்கில் : ஆட்டோவில் EVM | நாடெங்கிலும் சர்ச்சையை ஏற்படுத்திய EVM மெஷின் படங்கள்!

பாஜக பல தொகுதிகளில் ஒரே எண்ணிக்கையில் வாக்குகளை பெற்றதா ?

 

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button