ரூ.4,200 கோடி நிதி பெற்று பாஜக முதலிடம்.. தேர்தல் பத்திரங்கள் எனும் அங்கீகரிக்கப்பட்ட மோசடி ?

சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எஸ்பிஐ அளித்த தகவலின் படி 2022 ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையில் ஒரு கோடி மதிப்பிலான டினாமினேஷன்(Denomination) உள்ள 10,000 தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவுத்துள்ளது.

Advertisement

2018ம் ஆண்டுப் பாஜக அரசால் தேர்தல் பத்திரம்(Electoral Bond) திட்டம் கொண்டு வரப்பட்டது. 1,000ரூ, 10,000ரூ, 1,00,000ரூ, 10,00,000ரூ, 1,00,00,000ரூ போன்ற மதிப்புகளில் தேர்தல் பத்திரங்களானது அங்கீகரிக்கப்பட்ட எஸ்பிஐ(SBI) வங்கி கிளைகளில் கிடைக்கும். இதன் மூலம் தனி நபர், பெரு நிறுவனங்கள் என அனைவரும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிதி அளிக்கலாம். ஒருவர் எத்தனை தேர்தல் பத்திரம் பெறலாம் போன்ற எந்த அளவு கட்டுப்பாடுகளும் இல்லை.

Representation of People act, 1951 சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத்தில் 1% வாக்குகள் பெற்றுள்ள கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற முடியும். ஆனால், எந்தந்த கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெறலாம் என்ற பட்டியல் எங்களிடம் இல்லை எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலின்போது கட்சிகளுக்கு 20,000 ரூபாய்க்கு மேல் நிதி வழங்கியவர் பெயர் மற்றும் தொகையின் தரவுகளை நிதி ஆண்டின் இறுதியில் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று Representation of People Act சட்டத்தில் இடம்பெற்றிருந்தது. இதனை Electoral Bond Scheme, 2018 மூலம் திருத்திய பாஜக அரசு, தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை என மாற்றப்பட்டது.

தேர்தல் பத்திரம் என்பது வெளிப்படைத்தன்மைக்கு எதிராக உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் 2019ம் ஆண்டுத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Centre for Media Studies வெளியிட்ட Poll Expenditure, The 2019 Elections எனும் அறிக்கையின்படி 2019 நாடாளுமன்ற தேர்தலில் 55,000-60,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் அதிகப்படியாகச் செலவு செய்யப்பட்ட தேர்தல் இதுவே எனத் தெரிவித்துள்ளது.

மேலும், இதுவரை நடந்த தேர்தல்களில் பெயர் குறிப்படாத நிதி (Anonymous Funding) அதிகம் வழங்கப்பட்டது 2019 தேர்தலில் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணைய இணையத்தளத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதிகள் குறித்துப் பெயர் குறிப்பிடாமல் பதிவிட்டுள்ளது(Annual Audit Reports)

தேர்தல் ஆணையத்திலன் இணையத்தளத்தில் உள்ள தரவுகள்படி, 2017-18 நிதி ஆண்டில் வழங்கப்பட்ட 221 கோடி ரூபாயில் பாஜக- 210 கோடி, காங்கிரஸ்- 5 கோடி தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்டுள்ளது. இதில் திரிணாமுல், திமுக, அதிமுகப் போன்ற கட்சிகளின் தரவுகள் இல்லை.

2018-19ம் நிதி ஆண்டில் வழங்கப்பட்ட 2539.17 கோடி ரூபாயில் பாஜக 1450.89 கோடி, காங்கிரஸ்- 383.2 கோடி, திரிணாமுல் காங்கிரஸ்- 97.28 நிதியும் பெற்றுள்ளது. ஆம் ஆத்மி, திமுக, அதிமுகக் கட்சிகளின் தரவுகள் இல்லை.

2019-20ம் நிதி ஆண்டு வழங்கப்பட்ட 3441.32 கோடி ரூபாயில் பாஜக 2555.01 கோடி, காங்கிரஸ் 317.86 கோடி, திரிணாமுல் காங்கிரஸ் 100.46 கோடி, ஆம் ஆத்மி- 17.76 கோடி, திமுக- 45.5 கோடி, அதிமுக- 6.05 கோடி நிதியும் தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுள்ளது.

2020-21ம் நிதி ஆண்டு வழங்கப்பட்ட 325.06 கோடி ரூபாயில் பாஜக 22.38 கோடி, காங்கிரஸ்-10.07 கோடி, திரிணாமுல் காங்கிரஸ்-5.95 கோடி, திமுக- 80 கோடியும் தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுள்ளன.

*இதில் ( – ) என்று குறிப்பிட்டுள்ள கட்சிகளின் தேர்தல் பத்திரம் தொடர்பான தரவுகள் தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் இடம்பெறவில்லை.

இதில் 2020-21ம் ஆண்டில் பாஜக மிகக் குறைந்த நிதி பெற்றுள்ளது போலத் தெரிந்தாலும் தேர்தல் பத்திரம் கொண்டு வரப்பட்ட ஆண்டில்(2017-18) இருந்து 2020-21 வரையில் பாஜக 4238 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது. இது தேர்தல் பத்திரம் மூலம் அனைத்து கட்சிகளும் பெறப்பட்ட தொகையில் 65% என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பத்திரத்தில் பெயர் குறிப்பிடாமல் கட்சிகளுக்கு நிதி அளிக்கலாம் என்ற விதி இருப்பதால் பெரு நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாக இதனைப் பயன்படுத்திக் கொள்கிறது. இவை தேர்தலில் ஆளும் கட்சிக்கு அல்லது பெரிய கட்சிகளுக்கு ஆதரவான நிலையைக் கொண்டு செல்கிறது.

தேர்தல் பத்திரத்தின் ஒரு மூலையில் வெறும் கண்களில் பார்த்தால் தெரியாதபடி ஒரு குறியீடு பதிவிடப்பட்டிருக்கும். இவை அல்ட்ரா வயலட் லைட் மூலம் தெரியும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டில் யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு தொகை வழங்கியுள்ளனர் போன்ற தரவுகள் குறிப்பிடப்பட்டிருக்கும். குறியீட்டில் மறைந்துள்ள விவரங்கள் அனைத்தும் எஸ்பிஐ வங்கியிடம் இருக்கும்.  இதனை ஆளும் கட்சி எளிதாக அணுகி தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குக் கீழ் தேர்தல் பத்திரத்தை கொண்டு வருவது ஜனநாயகத்துக்கு எதிரானது என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.  இவை ஊழலை சட்டப்பூர்வமாக அனுமதிப்பது போல் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, Associaton for Democratic Reforms மற்றும் பலர் தேர்தல் பத்திரம் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர். பல விசாரணைகளை கடந்த இந்த வழக்கு 2022 அக்டோபர் 6ம் தேதி மீண்டும் விசாரிக்கப்பட்டது. தற்போது டிசம்பர் 6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தில் அனைத்து கட்சிகளும் சமமாகப் பங்குபெற வேண்டிய தேர்தலில், தேர்தல் பத்திரம் போன்ற சட்டங்கள் ஆளும் கட்சிக்கு சாதமாக அமையும் சூழலை ஏற்படுத்துகிறது.

தேசிய மற்றும் மாநில கட்சிகள், தேர்தல் பத்திரம் மூலம் பெரும் நிதிகளின் அறிக்கைகள் மக்கள் தெரிந்துகொள்ளும்படி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

links :

Status of filing of Annual Audit Report by Political Parties (Recognized National Parties), 2020-2021 (updated)

Status of filing of Annual Audit Report by Political Parties (Recognized State Parties), 2020-2021 (updated)

Status of filing of Annual Audit Report by Political Parties (Recognized National Parties),2019-2020 (updated)

Status of filing of Annual Audit Report by Political Parties (Recognized State Parties),2019-2020 (updated)

Status of filing of Annual Audit Report by Political Parties (Recognized National Parties),2018-2019 (updated)

Status of filing of Annual Audit Report by Political Parties (Recognized State Parties),2018-2019 (updated)

Status of filing of Annual Audit Report by Political Parties (Recognized National Parties),2017-2018 (updated)

Status of filing of Annual Audit Report by Political Parties (Recognized State Parties),2017-2018 (updated)

ELECTORAL BONDS AND OPACITY IN POLITICAL FUNDING

Govt recently printed 10k electoral bonds worth Rs 1 cr each, shows RTI reply

Introduction of the Scheme of Electoral Bond

Electoral bonds retrograde step, against transparency of political funding: EC To SC 

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button