500கி.மீ பயணம்.. குட்டியுடன் ஓய்வு.. இணையத்தை ஆக்கிரமித்த யானைகளின் புகைப்படம் !

கிட்டத்தட்ட ஒரு வருடக் காலமாக சுமார் 500 கிலோமீட்டருக்கு மேல் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டு வரும் ஆசிய காட்டு யானைகள் ஓய்வெடுக்கும் புகைப்படம் ஒன்று உலகளவில் அனைவரின் காதலையும் பெற்று வருகிறது.

Advertisement

கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதத்தில் சீனாவின் யுன்னான் மாகாணத்தின் புறநகரில் இருந்து தன் பயணத்தை தொடங்கிய 16 காட்டு யானைகள், 500 கிலோமீட்டருக்கு மேல் பயணத்தை மேற்கொண்டு கடந்த திங்கள் அன்று அம்மாகாணத்தின் தலைநகரான குன்மிங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஓய்வு எடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக பிரபலமாகி உள்ளது.

சீனா இதுவரை கண்டிராத மிக நீண்ட இடப்பெயர்வாகக் கருதப்படும் இப்பயணம் ஆரம்பம் முதலே சீனாவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து உள்ளது.

16 யானைகளுடன் தொடங்கிய பயணத்தில் இரு ஆண் யானைகள் இடையில் வழிமாறி சென்றுள்ளன. இந்த பயணத்தின் இடையில் 2020 நவம்பரில், அவர்கள் யுன்னானில் உள்ள புயர் எனும் பகுதிக்கு வந்தடைந்து உள்ளனர். அங்கு பெண் யானை ஒன்று குழந்தையைப் பெற்றெடுக்கவே, தாயும் குழந்தையும் சுமார் ஐந்து மாதங்கள் அங்கேயே தங்கிய பிறகு கடந்த ஏப்ரல் 16ல் மீண்டும் தன் பயணத்தை தொடங்கி உள்ளது.

Twitter link 

தற்போது ஓய்வு எடுத்துவந்த யானைகள் மீண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வடக்கு நோக்கிய தங்களது பயணத்தை மீண்டும் தொடங்கி உள்ளது. கண்காணிப்பு காட்சிகள் நகர்ப்புற வீதிகளில் அணிவகுத்து வருவதைக் சீன அதிகாரிகள் கண்டறிந்துள்ளன.

பொது மக்களுக்கும், யானைகளுக்கும் எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 410க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள், 374 வாகனங்கள், 14 ட்ரோன்கள் மற்றும் இரண்டு டன் யானை உணவுகளுடன் யானைகளை மனித பகுதிகளில் இருந்து விலக்க தொடர்ச்சியான முயற்சிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

இந்த பயணம் தொடர்பான செய்திகள் சீன தொலைக்காட்சிகளில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. வன அதிகாரிகள் இந்த பயணத்தின் நோக்கமும், முடிவும் தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

யானைகளின் இந்த பயணக் காட்சிகள் அங்கு உள்ள மக்களிடம் தொடர்ந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக யானைகள் ஓய்வு எடுக்கும் அந்த ட்ரோன் புகைப்படங்களும் காணொளிகளும் உலகம் முழுவதும் அலாதி அன்பை பெற்று வருகின்றன.

யானைகளின் இந்த பயணம் சில நேரங்களில் மக்களுக்கு பயிர் சேதத்தை (சுமார் 1 மில்லியன் டாலர்) ஏற்படுத்தியிருந்தாலும், எந்த சூழ்நிலைிலும் பிரியாமல், கூட்டாக பயணத்தை மேற்கொண்டு வரும் யானைகளை பிரமிப்பு குறையாமல் மக்கள் பார்த்து வருகின்றனர்.

Links :

chinas-herd-of-wandering-elephants-takes-a-rest-after-500km

china-wild-elephant-herd-travel

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button