இந்தியாவில் இறக்குமதி வரி ரொம்ப அதிகம் – எலான் மஸ்க் மதன் கெளரிக்கு பதில் ட்வீட் !

பிரபல தமிழ் யூடியூபர் மதன் கெளரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” டெஸ்லா கார்களை இந்தியாவில் விரைவில் தொடங்குமாறு எலன் மஸ்க் அவர்களை டக் செய்து பதிவிட்டு இருந்தார். அதற்கு எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.
We want to do so, but import duties are the highest in the world by far of any large country!
Moreover, clean energy vehicles are treated the same as diesel or petrol, which does not seem entirely consistent with the climate goals of India.
— Elon Musk (@elonmusk) July 23, 2021
” நாங்களும் அதை செய்ய விரும்புகிறோம். ஆனால், இறக்குமதி வரிகள் என்பது உலகிலேயே எந்தவொரு பெரிய நாட்டையும் விட மிக உயர்ந்தவை. மேலும், தூய்மையான எரிசக்தி வாகனங்கள் கூட டீசல் அல்லது பெட்ரோல் போலவே கருதப்படுகின்றன. இது இந்தியாவின் காலநிலை இலக்குகளுடன் முற்றிலும் ஒத்துப்போகவில்லை. எனினும், மின்சார வாகனங்களுக்கு குறைந்தபட்சம் தற்காலிக கட்டண நிவாரணம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம் ” என எலன் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.
I’m told import duties are extremely high (up to 100%), even for electric cars. This would make our cars unaffordable.
— Elon Musk (@elonmusk) August 1, 2019
எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் இப்படி பதில்கள் வருவது முதல் முறையல்ல. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் டெஸ்லா கார் தொடர்பான கேள்விகள் எழுப்பப்படும் போது எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதில்கள் வந்துள்ளன.
For other countries, we pay in part for the local factory by selling cars there ahead of time. Also, gives a sense of demand. Current rules in India prevent that, but recent changes in sales tax give hope for future changes.
— Elon Musk (@elonmusk) August 1, 2019
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை பெரிய அளவில் குறைக்க கோரி எலான் மஸ்க் தரப்பில் கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இது குறித்து டெஸ்லா இன்க் தரப்பில் இருந்து இந்திய அமைச்சகங்களுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
” இந்த ஆண்டில் இந்தியாவில் விற்பனையைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்ட டெஸ்லா, இந்திய அமைச்சர்கள் மற்றும் நிதி ஆயோக் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், டெஸ்லா கார்களை இறக்குமதி செய்வதற்கான கூட்டாட்சி வரிகளை 40% ஆக குறைப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எனக் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்போதைய விலையில் 40,000 டாலர்கள் மேல் உள்ள கார்களுக்கு 100% மற்றும் 40,000 டாலர்களுக்கு 60% ஆக உள்ள வரியுடன் ஒப்பிடப்பட்டு கூறப்பட்டு இருக்கிறது.
டெஸ்லாவின் அமெரிக்க வலைதளத்தின்படி, மாடல் 3 ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் பிளஸ் என்ற ஒரே ஒரு மாடல் மட்டுமே 40,000 அமெரிக்க டாலர்களுக்கு குறைவான விலையில் உள்ளது.
இந்தியாவின் போக்குவரத்துக்கு அமைச்சர் நிதின் கட்கரி மார்ச் மாதம் ராய்ட்டர்ஸிற்கு அளித்த தகவலில், டெஸ்லாவின் உற்பத்தி செலவு சீனாவில் இருப்பதை விட குறைவாக இருப்பதை உறுதி செய்ய சலுகைகள் வழங்க இந்தியா தயாராக இருக்கும், ஆனால் அது உள்நாட்டில் உற்பத்தி செய்தால் மட்டுமே எனக் கூறினார் ” என ஜூலை 23-ம் தேதி பிசினஸ்டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.
Links :
Tesla seeks cut in import duty in India, says will boost demand
Import Duties in India Will Make Tesla Cars ‘Unaffordable’, Says Elon Musk
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.