This article is from Apr 16, 2019

நாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன ?

தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு சென்று உங்கள் வாக்கை செலுத்தும் போது EVM இயந்திரத்தில் நீங்கள் விரும்பும் சின்னத்தின் பட்டனை அழுத்தும் போது வேறு சின்னத்தில் விளக்கு எரிந்தால் நீங்கள் அழுத்திய பட்டனில் இருந்து விரலை எடுக்க வேண்டாம்.

அதிகாரிடம் காட்டிய பிறகு, ஓட்டுக்கள் திருடப்படுவதை நிரூபித்த பிறகே விரலை எடுங்கள். இந்த தகவல் சில நாட்களாக வாட்ஸ் அஃப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

ஒருவேளை தேர்தலின் போது வாக்கு இயந்திரத்தில் நமக்கு பிடித்த சின்னத்தின் பட்டனை அழுத்தும் போது வேறு சின்னத்தில் விளக்கு எறிந்தால், உடன விரலை எடுத்தாலும் நாம் செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன என்பதை காண்போம்.

Election Rules 1961-ன் படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ” Voter Verifiable Paper Audit Trail (VVPAT) ” -ஐ பொருந்தி பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கிறது. VVPT என்பது EVM-ல் வாக்கினை செலுத்தும் பொழுது செலுத்திய வாக்கு யாருக்கு விழுந்தது என்பது சின்னத்துடன் ஒரு பேப்பரில் அச்சிட்டு வரும். இனி வரும் தேர்தலில் VVPT அதிகம் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

EVM குறித்த பல தகவலுக்கு காணொளியை பார்க்கவும் :

புதிய விதி 49MA :  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கினை செலுத்தும் பொழுது வேறு ஒரு சின்னத்தில் விளக்கு எறிந்தால் வாக்காளர் அங்குள்ள தேர்தல் அதிகாரியை அணுகலாம். தன் ஓட்டு திருடப்படுகிறது என்ற குற்றச்சாட்டு குறித்து உண்மைத்தன்மையை அறிய வாக்காளரிடம் இருந்து எழுத்து வடிவிலான கடிதத்தை அதிகாரி வாங்கிக் கொள்ளலாம்.

வாக்குச்சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் கூறியதை நிரூபிக்க வாக்காளருக்கு சோதனை ஓட்டு போட அங்குள்ள மற்ற வேட்பாளர்கள்/வாக்குச்சாவடி ஏஜென்ட்கள் முன்னிலையில் அனுமதி வழங்கப்படும். அப்படி போடப்படும் ஓட்டு வேறு சின்னத்திற்கு விழுந்து வாக்காளர் கூறியது உண்மை எனத் தெரிய வந்தால் உடனடியாக ரிட்டனிங் ஆபீசருக்கு தகவல் தெரிவித்து, குறைபாடு உள்ள இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடைப்பெறுவதை நிறுத்தி வைப்பர்.

தேர்தல் தொடங்குவதற்கு முன்பே வாக்குச்சாவடியில் வேட்பாளர்கள்/வாக்குச்சாவடி ஏஜென்ட்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டு பதிவு நடைபெற்ற பின்பே தேர்தல் துவங்கும். அதையும் தாண்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறுகள் நடப்பதாக அறிந்தால் உடனடியாக அங்குள்ள தேர்தல் அதிகாரியை அணுகலாம்.

சமூக வலைதளங்களில் விரலை எடுக்காமல் அதிகாரிகளை அழைத்து காண்பிக்க சொல்வது சாத்தியமா என தெரியவில்லை. மேலும், பட்டனை அழுத்திக் கொண்டே இருக்கும் பொழுது விளக்கு தொடர்ந்து எரியுமா ? என்பதும் நமக்கு தெரியவில்லை. எனினும், நீங்கள் நேரடியாகவே நடப்பதை குறித்து புகார் அளிக்க இயலும்.

குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் வாக்குப்பதிவு நிறுத்தப்படும், பொய்யாகும் பட்சத்தில் எச்சரிக்கை செய்யபடுவீர்கள்!

ஆதாரம் : 

Voter can challenge paper trail operation

Electronic Voting Machine

Please complete the required fields.




Back to top button
loader