ஆட்டோவில் EVM | நாடெங்கிலும் சர்ச்சையை ஏற்படுத்திய EVM மெஷின் படங்கள்!

தேர்தலுக்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் புகைப்படங்கள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்கி இருக்கின்றன.

Advertisement

EVM இயந்திரங்களை ஆட்டோவில் கொண்டு செல்வது, சிறுவர்களை வைத்து தூக்கிச் செல்வது, வாகனத்தில் வைத்து இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகிக் கொண்டிருக்கின்றன. நடந்த நிகழ்வுகள் குறித்தும், அதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதில்கள் பற்றியும் விவரிப்போம்.

ஆட்டோவில் EVM :

ஷேர் ஆட்டோ ஒன்றில் evm இயந்திரங்களுடன் ஓட்டுநர் செல்போன் பேசியபடி செல்லும் புகைப்படம் சென்ற மாதம் ஏப்ரல் 16-ம் தேதி செய்திகளில் வெளியாகி இருக்கிறது. தெலங்கானா மாநிலத்தின் நிசாமாபாத் தொகுதியின் கீழ் இருக்கும் ஜகிதால் பகுதியில் தேர்தல் அதிகாரிகளின் பயிற்சிக்கு பயன்படுத்திய மாதிரி மின்னணு இயந்திரங்களை ஆட்டோ ரிக்ஸாவில் கொண்டு சென்றுள்ளனர்.

இதற்கு பதில் அளித்த தேர்தல் அதிகாரிகள், ” தேர்தல் அதிகாரிகளுக்கு மாதிரி வாக்குப்பதிவு பயிற்சிக்கு பயன்படுத்திய இயந்திரங்களை பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்ல நினைத்தோம். ஆனால், அந்நேரத்தில் ஏற்கனவே பாதுகாப்பு அறை பூட்டப்பட்டு இருந்தது. பின் அதனை தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றதாக ” ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது.

Advertisement

தாமதமாக உத்தரவுகள் வந்ததால் இரவு நேரத்தில் கொண்டு சென்றதாகவும், சில தினங்களுக்கு முன்பு கார்களில் கூட evm மெஷின்களை கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

சிறுவர்கள் தலையில் EVM :

சிறுவர்கள் தலையில் evm பெட்டிகள் வைத்து கொண்டு செல்லும் காட்சிகள் பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்டவை. பீகாரின் ஜெய்ப்பூர் பொறியியல் கல்லூரியின் வளாகத்தில் சிறுவர்கள் தலையில், கையில் evm மற்றும் VVPAT பெட்டிகளை கொடுத்து எடுத்து செல்வது நிகழ்ந்து உள்ளது. அவர்கள் உடன் துப்பாக்கி ஏந்தியவர்களும், காவலர்களும் இருப்பதை வீடியோ ஒன்றில் பார்க்க முடிந்தது.

வீடியோ : HINDUSTAN EXCLUSIVE: Law on the issue: officials gave EVMs, VVPAT responsibilities to children

இது பற்றிய செய்தி, வீடியோ பதிவுடன் லைவ்ஹிந்துஸ்தான் தளத்தில் வெளியாகி இருக்கிறது. evm மற்றும் VVPAT பெட்டிகளை குழந்தைகள் உதவி கொண்டு எடுத்துச் சென்றது சட்டத்திற்கு புறம்பானதாக இருந்துள்ளது. அந்த வீடியோவில் சிறுவர்களை சுற்றி ஆயுதம் ஏந்தியவர்கள், காவல் அதிகாரிகள் இருப்பதையும் காணலாம்.

காரில் EVM :

பீகார் மாநிலத்தில் முஸாஃபர்பூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் evm இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதாக மே 6-ம் தேதி செய்திகளில் வெளியாகின. இது பற்றி பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் அலோக் ரஞ்சன் கோஷ், துறை அதிகாரியான அவதேஷ் சிங் சில ரிசர்வ் இயந்திரங்களை கொடுத்து பழுதாகியது மாற்றப்பட்டுள்ளது. மாற்றப்பட்டதற்கு பிறகு அவர் இரண்டு வாக்குப்பதிவு யூனிட்ஸ், ஒரு கன்ட்ரோல் யூனிட், ஒரு VVPAT யூனிட் உடன் தன் காரில் சென்றுள்ளார் ” எனத் தெரிவித்து உள்ளார்.

” அவதேஷ் சிங் கார் அரசுக்கு சொந்தமான இடத்தில் இல்லாமல் தனியார் விடுதி பகுதியில் evm இயந்திரங்களை வைத்து இருந்தது நிலையான இயக்க செயல்முறைக்கு எதிரானது. அவரின் பதிலுக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் ” என கோஷ் தெரிவித்து இருந்தார்.

evm பெட்டிகள் :

10-க்கும் மேற்பட்ட மின்னணு இயந்திர பெட்டிகளை இருவர் எடுத்துச் செல்லும் காட்சிகளும் வைரல் ஆன புகைப்படங்கள் தொகுப்பில் இருந்தது. ஹிந்துவின் Frontline செய்தி தளத்தில், Missing EVMs என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் இந்த படமானது இடம்பிடித்து உள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பூம் மாவட்டத்தில் நான்காம் கட்ட போல்பூர் லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் விநியோக மையத்திற்கு evm எடுத்துச் செல்லும் காட்சிகள் என இப்படத்திற்கு கீழே குறிப்பிட்டு உள்ளனர்.

இதுபோற சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நாடு முழுவதிலும் நடைபெற்று உள்ளது. அதில், கடை போன்ற பகுதியில் பல evm இயந்திர பெட்டிகள் மொத்தமாக எடுக்கப்படும் வீடியோ வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் சாண்டுளி தொகுதியில் எடுக்கப்பட்டன. இரவில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. அதேபோன்று, பகலில் evm பெட்டில்களை கொண்டு வந்து இறக்கி வைக்கும் வீடியோ வெளியாகின. இந்த வீடியோ செய்திகளிலும் விவாதமாகியது.

வீடியோவில் பார்த்த சாண்டுளி தொகுதியின் பகுதியில் 35 ரிசர்வ் இவிஎம் மெஷின்கள் வைக்கப்பட்டு இருந்ததாக நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதற்கு பதில் அளித்த தேர்தல் அதிகாரிகள், ” இந்த இயந்திரங்கள் பாதுகாப்பு அறை மற்றும் கவுன்டிங் அறைக்கு பிற இவிஎம் இயந்திரங்கள் லாஜிஸ்டிகள் பிரச்சனை ஆகியதால் கொண்டு சென்றுள்ளனர். விதிகளின் படி, வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் ரிசர்வ் இவிஎம் மெஷின்கள் கொண்டு செல்லலாம் எனத் தெரிவித்து உள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தவறுகள் நடக்க உள்ள வாய்ப்பு இருக்கிறதா, ஹக் செய்ய முடியுமா ? என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுகிறது. இதற்கான சரியான விளக்கத்தை வீடியோவில் பார்த்து அறிந்து கொள்ளவும்.

ரிசர்வ் பெட்டிகளாகவே இருந்தாலும், முறையான பாதுகாப்பு இன்றி ஏன் கொண்டு செல்கின்றனர் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கவில்லை.

evm குறித்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இதையெல்லாம் தவிர, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமே உள்ளன. கட்சிச் சார்ந்தவர்கள் புகார் அளித்தும், போராட்டம் நடத்தியும் வந்துள்ளனர். கார்களில், தனியார் விடுதிகளில் evm இயந்திரங்களை கொண்டு சென்று வைத்து இருக்கும் காட்சிகள் evm மீதான சர்ச்சையை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

Proof :

Officials transporting dummy EVMs in Telangana at midnight fuel suspicion

EVMs, VVPATs Recovered From Hotel In Muzaffarpur, Bihar; Inquiry Ordered

HINDUSTAN EXCLUSIVE: Law on the issue: officials gave EVMs, VVPAT responsibilities to children

‘Missing’ EVMs

Questions Raised Over Movement Of EVMs In UP, Bihar After Videos Surface

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button