ஃபேஸ்புக்கிடம் சிக்கிய பிஜேபி & காங்கிரஸ் பக்கங்கள்|நீக்கி நடவடிக்கை!

சமீபத்தில் ஃபேஸ்புக் இந்தியாவை மையமாக கொண்டு நம்பகத்தன்மை அற்ற செயல் மற்றும் ஸ்பேம் தகவல்களை பரப்பும் பக்கங்களை நீக்கி உள்ளது. இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் நடந்ததாக ஃபேஸ்புக் கூறியுள்ளது. இதில் காங்கிரஸ் பக்கம் நீக்கப்பட்டதாக செய்தி பரவியது.

உண்மையை கொஞ்சம் தீவிரமாக பார்த்தால் அதில் பாஜகவும் சிக்கியுள்ளது தெரிகிறது. நடவடிக்கைகளில் 0.2 மில்லியன் பயனர்களைக் கொண்ட காங்கிரஸ் சார்பு பக்கம் நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் விளம்பரத்திற்காக செலவழித்த தொகை 39000 $ என்கிறது முகநூல் .

Advertisement

மேலும் 2 மில்லியன் பயனர் கொண்ட sliver touch என்ற நிறுவனத்தின் பக்கங்களும் நீக்கப்பட்டது. அது சுமார் 70000$ விளம்பரத்திற்கு செலவழித்துள்ளது.

சரி , ஏதோ ஒரு நிறுவனம் தானே எனப் பார்த்தால் அவர்கள் வெளியிட்ட செய்திகளின் மாதிரிகளை முகநூல் வெளியிட்டுள்ளது, அது பிரதமரை உயர்வாக சித்தரிக்கும் பதிவு. ஆக, பாஜக சார்பாக செயல்படும் தளம் பெருமளவு சிக்கியுள்ளது .

நேரடியாக காங்கிரஸ் பெயர் போல் இல்லாமல் வேறு ஒரு நிறுவனம் என்பதால் ஊடகங்களும் கவனிக்கத் தவிறிவிட்டது. இரு தரப்பும் சேர்ந்து 109000 $ தொகை செலவிட்டுள்ளது . கிட்டத்தட்ட இதன் மதிப்பு 77 லட்சம்..

காங்கிரசிற்கு ஆதரவாக 138 பக்கங்கள், 549 முகநூல் கணக்குகள் என மொத்தம் 687 பக்கம்/கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளதாகவும், பிஜேபியின் ஆதரவாக இருந்த 1 பக்கம், 12 முகநூல் கணக்குகள், 1 குரூப் , ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் நீக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

Advertisement

காங்கிரஸ் ஆதரவு முகநூல் கணக்குகள்/பக்கங்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும் அவர்கள் செலவிட்ட தொகை பிஜேபியை விட  குறைவு. எண்ணிக்கையில் குறைவான பிஜேபி ஆதரவு கணக்கு/பக்கங்கள் நீக்கப்பட்டு இருந்தாலும் அவை விளம்பரத்திற்கு செலவிட்ட தொகை அதிகம்.

அரசியல் கட்சிகள் தேர்தலை தீர்மானிக்கும் வகையில் செய்திகளை பரப்புவதற்கு எதிரான நடவடிக்கைகள் முகநூல் முன்னெடுத்துள்ளது மகிழ்ச்சி.

ஆதாரம்: 

Removing Coordinated Inauthentic Behavior and Spam From India and Pakistan

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம்.
எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close