ஃபேஸ்புக்கில் உடல்நலம் சார்ந்த போலியான தகவல்கள் பில்லியன் கணக்கான பார்வையை பெறுகிறது – அவாஸ் அறிக்கை.

முதன்மை சமூக ஊடகமாக திகழும் ஃபேஸ்புக் தளத்தில் ஆக்கப்பூர்வமான எத்தனையோ தகவல்கள் பகிரப்பட்டு மக்களிடம் சென்று விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருந்தாலும் கூட போலிச் செய்திகள், தவறான தகவல்களும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, உடல்நலம் சார்ந்த அறிவுரைகள், மருத்துவ தகவல்களில் ஆதாரமற்ற, தவறான தகவல்கள்  ஏராளமாய் குவிந்து இருக்கின்றன, இன்னும் தொடர்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் தொடங்கிய போது பரவிய தவறான தகவல்கள் ஏராளம். ஃபேஸ்புக்கில் பரவும் தவறான உடல்நல குறிப்புகள், தகவல்கள் குறித்து நாமும் தொடர்ந்து பதிவிட்டும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்தும் வருகிறோம்.

Advertisement

2019 மே முதல் 2020 மே வரை ஃபேஸ்புக்கில் உடல்நலம் தொடர்பான தவறான தகவல்கள் 3.8 பில்லியன் பார்வையைப் பெற்றுள்ளன என்றும், கோவிட்-19 பாதிப்பு உச்சத்தில் இருந்த 2020 ஏப்ரல் மாதத்தில் அது உச்சத்தை எட்டியதாகவும் அவாஸின் புதிய அறிக்கை கூறுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான அவாஸ் ” Facebook’s Algorithm : Major Threat to Public Health ” என்கிற தலைப்பில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்(CDC) போன்ற சிறந்த 10 முன்னணி சுகாதார நிறுவனங்களின் இணையதளங்களை விட தவறான தகவல்களை பரப்பும் 10 இணையதளங்கள் 4 மடங்கு அதிக பார்வையைப் பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற தகவல்களின் உண்மைத்தன்மை ஆராய்ந்து சரிபார்க்கப்பட்ட போதிலும் கூட அவற்றில் 16% தவறான தகவல்களுக்கு மட்டுமே எச்சரிக்கை லேபிள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 84% தகவல்கள் எச்சரிக்கை இல்லாமல் செல்கின்றன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Twitter link | archive link 

Advertisement

இக்குழு, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளில் உள்ள 42 ” சூப்பர்ஸ்பிரெடர் ” ஃபேஸ்புக் பக்கங்களுடன், உடல்நலம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் மொத்தம் 83 இணையதளங்களை (நம்பத்தகாதது என நியூஸ்கார்டால் ஃப்ளக் செய்யப்பட்டவை) ஆய்வு செய்தது.

அவாஸ் பிரச்சாரத்தின் இயக்குனர் ஃபாடி குர்ஆன், ” ஃபேஸ்புக்கின் வழிமுறை மக்களின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சறுத்தல். மார்க் ஜூக்கர்பெர்க் தொற்றுநோய்களின் போது நம்பத்தகுந்த தகவல்களை வழங்குவதாக உறுதி அளித்து இருந்தார். ஆனால், அவரது ஃபேஸ்புக் வழிமுறையால் 2.7 பில்லியன் பயனர்களில் பலரை சுகாதாரம் சார்ந்த தவறான தகவலை பரப்பும் நெட்வொர்களுக்கு நகர்த்துவதன் மூலம் அவரின் முயற்சிகள் தோல்வி அடையச் செய்கிறது ” எனத் தெரிவித்து உள்ளதாக பிபிசி செய்தியில் வெளியாகியது.

நிலைமையை சரி செய்ய, ” இதுபோன்ற தவறான தகவல்களைக் காணும் அனைத்து பயனர்களும் அதன் உண்மைத்தன்மையை சுயமாக சரிபார்க்க வேண்டும் மற்றும் இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிடும் பயனர்களை கண்டறிந்து நியூஸ் பீட்-ல் தவறான பதிவுகளை தரமிறக்க செய்ய வேண்டும் ” என  இரு வழிகளையும் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்தியாவிலும் சுகாதாரம் தொடர்பாக பல தவறான தகவல்கள் வெளியாகி லட்சங்களில் மக்களின் பார்வையை பெறுகிறது. படித்த மக்களும் கூட ஃபேஸ்புக்கில் காணும் மருத்துவம், சுகாதாரம் சார்ந்த தவறான தகவல்களை உண்மை என நினைத்து பகிரவும் செய்கிறார்கள். சமூக ஊடகங்களில் காணும் தகவல்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். நீங்கள் பார்க்கக்கூடிய தகவல்களின் உண்மைத்தன்மையை சுயமாக தேடி அறிந்து கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது அவசியம்.

Links : 

Facebook ‘danger to public health’ warns report

Facebook’s Algorithm: A Major Threat to Public Health

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button