This article is from Mar 11, 2019

ஃபேஸ்புக் விளம்பரத்திற்கு 2 கோடி செலவிட்ட பிஜேபி ஆதரவாளர்கள்!

2019  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கையில் அரசியல் பிரச்சாரங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளன. குறிப்பிட்ட கட்சிகளுக்கும், தலைவர்களுக்கு ஆதரவாகவும் பதிவிடும்  ஃபேஸ்புக் பேஜ்-களில் இருந்து கட்டணம் செலுத்தி விளம்பரங்கள் அதிகம் வெளியாகும்.

இதில், இந்தியாவில் கட்டணம் செலுத்தி விளம்பரப்படுத்தப்பட்ட அரசியல் சார்ந்த ஃபேஸ்புக் விளம்பரங்கள் பற்றிய விவரங்களை ஃபேஸ்புக் வெளியிட்டு உள்ளது. ஃபேஸ்புக்கின் Ad Archive Report-ல் பிப்ரவரி 24  முதல் மார்ச் 2-ம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் இந்தியாவில் கட்டணம் செலுத்தி செய்யும் விளம்பரங்களில் அதிக தொகையை செலவிட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2,500  ஃபேஸ்புக் பக்கங்கள் பிப்ரவரி24-மார்ச் 2 வரையில் அரசியல் மற்றும் நாட்டின் முக்கிய விஷயங்கள் பற்றிய விளம்பரங்களுக்கு செலவிட்ட தொகை 4.1 கோடியாகும். இதில், 221 பேஜ்கள் மட்டும் அரசியல் விளம்பரங்களுக்காக 3.8 கோடி செலவிட்டு உள்ளனர். இந்த 221 பேஜ்களில் முதன்மையாக இருப்பது பிஜேபி, Pro-Bjp மற்றும் அரசு சார்ந்த பேஜ்கள்.

பிஜேபிக்கு மற்றும் நரேந்திர மோடிக்கு ஆதரவளிக்கும் ஃபேஸ்புக் பக்கங்களே பட்டியலில் முதன்மையாக இருக்கின்றன. அதில், முதலிடத்தில் இருப்பது ” Bharat Ke  Mann Ki Baat ” என்ற verified செய்யப்படாத ஃபேஜ். இந்த பக்கத்தில் ஒரு மாதத்தில் மட்டும்  1,556 அரசியல் விளம்பரங்கள் பதிவிடப்பட்டுள்ளன. அதற்காக செலவு செய்யப்பட்ட தொகையானது 1.2 கோடியாகும். ஒரு பதிவுக்கு தோராயமாக ரூ.7,700 செலவிட்டு இருப்பர்.

பிரதமர் மோடியின் ரசிகர் பக்கமான ” Nation With NaMo ” ஃபேஸ்புக்கில் 1.1 மில்லியன் பேரை Followers ஆக கொண்டு உள்ளது. அரசியல் விளம்பர பட்டியலில் இந்த பக்கம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 1,074 விளம்பரங்களுக்கு ரூ.64 லட்சம் செலவிட்டு உள்ளனர்.  ஒரு பதிவுக்கு தோராயமாக ரூ.6,000 செலவிட்டு இருப்பர்.

இதற்கு அடுத்த இடத்தில் மத்திய அரசின் “ MyGovIndia” எனும் பக்கம்  123 விளம்பரங்களுக்கு 34 லட்சம் செலவிட்டு உள்ளது. இதனை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 3,70,000 பேர். நான்காவது இடத்தில் அரசியல் இல்லாமல் Daily Hunt என்ற நியூஸ் ஆஃப் இடம் பிடித்து உள்ளது. இது  16 விளம்பரங்களுக்கு ரூ.33லட்சம் செலவிட்டு உள்ளது.

அரசியல் தலைவருக்கு அதிக விளம்பரம் செய்ததில் ஒடிசாவின் பிஜூ ஜனதா தள கட்சி முதல்வர் நவீன் பட்நாயக்கின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் முதன்மையாக உள்ளது. இந்த பக்கத்தில் 32 விளம்பரங்களுக்கு 8 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஃபேஸ்புக் விளம்பர செலவு என்று பார்த்தல் 5.6 லட்சம், இதைத் தொடர்ந்து YSR காங்கிரஸ்(2.8லட்சம்), தெலுங்கு தேசம் கட்சி(1.9 லட்சம்), திமுக(32,812) செலவிட்டு உள்ளனர்.

பிஜேபி தலைவர் அமித்ஷாவின் ஃபேஸ்புக் பக்கம் 2 லட்சம் செலவிட்டு உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் 6.6 லட்சம் செலவிட்டு உள்ளது.

தேர்தல் நேரத்தில் சமூக வலைதளங்களில் அரசியல் பதிவுகளுக்கு, விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள் இருப்பதால் தேர்தலுக்கு முன்பே அரசியல் மற்றும் அரசியல் தலைவர்கள் சார்ந்த கட்டணம் செலுத்திய விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

Ad Library Report

Pro-Modi and BJP pages spent highest on Facebook ads, Naveen Patnaik most advertised politician

Over 50% Political Ad Spend On Facebook In February Were For BJP: Report

 

Please complete the required fields.




Back to top button
loader