அரசியல் விளம்பரத்தில் பதிவிடுபவர் விவரங்களைப் பார்க்கலாம் – பேஸ்புக் புதிய அறிவிப்பு !

இந்தியத் தேர்தல் களத்தில் மக்களின் ஆதாரவை பெறுவதற்கு அதிக அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் தளமாக சமூக வலைதளங்கள் உள்ளன. இதில், அசைக்க முடியாத ஒன்றாக ஃபேஸ்புக் அமைந்து விட்டது.

தற்பொழுது எல்லாம் அரசியல் சார்ந்த பதிவுகள், அரசியல் விளம்பரங்களை அடிக்கடி பார்க்க முடிகிறது. ஃபேஸ்புக் தளத்தில் அரசியல் விளம்பரங்கள் பதிவிடும் முகநூல் பக்கங்கள் அதிகம் ஸ்பொன்சர் செய்வதை பார்க்க முடியும். மேலும், அந்த முகநூல் பக்கங்களை இயக்குவது யார் ? எங்கிருந்து இயங்குகிறது என்ற முக்கிய விவரங்களை யாரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை.

வரும் 2019 மக்களவைத் தேர்தலை முன்னிறுத்தி இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய கொள்கைகளை கடைபிடிக்க உள்ளது. அதன்படி, இந்தியாவில் பதிவிடப்படும் அரசியல் சார்ந்த விளம்பரங்கள் அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருக்கும் என அறிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் தளம் தேர்தல் அரசியலுக்கு தவறாக பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தலைக் குறிப்பிட்டு கூறப்படுகிறது. ஆக, ஃபேஸ்புக்கில் வெளிப்படைத்தன்மை விதிகளை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில் நாடுகளைத் தொடர்ந்து நான்காவது மிகப்பெரிய ஃபேஸ்புக் பயன்பாட்டு நாடான இந்தியாவில் கொண்டுவரப்படுகிறது என டிசம்பர் 2018-ல் Facebook Newroom-ல் வெளியாகி இருக்கிறது.

இனி ஃபேஸ்புக்கில் பதிவிடப்படும் அரசியல் விளம்பரங்கள் உடன் “ published by “  அல்லது “ paid by “ என யார் பதிவிடுகிறார்களோ அவர்களின் விவரம் இடம்பெறும். மேலும், அரசியல் விளம்பரங்கள் பதிவிடும் பக்கங்களின் “ location “ உள்ளிட்ட விவரங்களையும் மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

இதற்காக விளம்பரப் பதிவுகளை பதிவிடும் விளம்பரத்தாரர்கள் தங்களின் அடையாளங்கள் மற்றும் முழு விவரங்களையும் விரைவாக அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் இந்த அம்சம் மற்றும் கொள்கை பிப்ரவரி 21-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.

அரசியல் விளம்பரங்கள் வெளியிடுபவர்கள் குறித்த வெளிப்படைத்தன்மை கொண்டு வருவதன் மூலம் பார்க்கும் விசயங்கள் பற்றி மக்கள் அறிந்து கொள்ள முடியும் மற்றும் எதிர்கால தேர்தல் நேரத்தில் தவறாக பயன்படுத்தாமல் இருக்க உதவும் என நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று, தேர்தலை மையமாகக் கொண்டு வெளியிடப்படும் ஆன்லைன் அரசியல் விளம்பரங்களின் வெளிப்படைத்தன்மைக்காக சிறந்த முயற்சிகளை துவங்க உள்ளதாக ஜனவரில் கூகுள் நிறுவனம் அறிவித்து இருந்தது

தேர்தல் பிரச்சாரத்தில் கூறப்படும் செய்திகள் எளிதாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக மக்களை அடைந்து விடுகிறது. ஆகையால், அரசியல் விளம்பரங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அரசியல் விளம்பரங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

Increasing Ad Transparency Ahead of India’s General Elections

Facebook ramps up efforts to make elections ads more transparent, to start enforcement on February 21

Please complete the required fields.
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close