This article is from Nov 20, 2018

BJP IT WING-ஐ கலாய்த்த கார்த்திகேய சிவசேனாபதி

கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் அழிந்து வரும் பாரம்பரியக் காங்கேயம் காளைகளைப் பாதுகாக்க ” சேனாபதி காங்கேயம் ஆராய்ச்சி மையத்தினை ” நிறுவி பல வருடங்களாக நாட்டுமாடு இனத்தினைக் காப்பாற்றி வருகிறார். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைவராலும் அறியப்பட்டார். சமீபத்தில் அவருடைய முகநூல் பக்கத்தில் பணமதிப்பிழக்க நடவடிக்கை பற்றின வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார், அந்த வாக்கெடுப்பபானது நீங்கள் பணமதிப்பிழக்கத்ததை ஆதரிக்கிறீர்களா – ஆம் ?இல்லை ? என்ற கேள்வியுடன் அமைந்து இருந்தது.

அந்த வாக்கெடுப்பில் சில fake id -கள் வாக்களித்து தவறாக பயன்படுத்தியதாக தகவல் வந்தது இதைப்பற்றி கார்த்திகேய சிவசேனாபதி அவர்களிடம் YouTurn தொடர்பு கொண்டு பேசியபொழுது கூறியதாவது,

நவம்பர் 8 அன்று அந்த FAKE ID-கள் உங்களுடைய முகநூல் கணக்கில் உள்ள வாக்கெடுப்பில் செய்தது என்ன ?

பணமதிப்பிழக்கத்ததை எத்தனை பேர் ஆதரிக்கிறீர்கள் என நான் பதிவிட்ட வாக்கெடுப்பில் 5.30 மணி வரை 4500லிருந்து 5000 வரை வாக்குகள் பதிவாகி இருந்தன. அதில் 8யில் இருந்து 9 சதவீத நபர்கள் பணமதிப்பிழக்கத்தை ஆதரித்தும் , மீதமுள்ள 92 சதவீத நபர்கள் பணமதிப்பிழக்கத்தை எதிர்த்தும் இருந்தனர். வாக்கெடுப்பில் பொதுவாக அனைவரும் அவர்களுடைய கருத்துக்களை பதிவேற்றின. இப்படி இயல்பாக போய்க்கொண்டு இருந்த வாக்கெடுப்பு திடீரென்று பிஜேபி IT WING உருவாக்கிய fake id-கள் மூலமாக 4000 வாக்குகளாக இருந்த வாக்கெடுப்பு பணமதிப்பிழக்கத்தை ஆதரித்து 11500வாக்குகளாக அதிகரித்தது.

இறுதியில் 52%சதவீதத்தில் அந்த வாக்கெடுப்பு முடிந்தது,இது பிஜேபி தேர்தலில் கடைசியாக வாங்கிய வாக்கு சதவீதத்தை விட அதிகமானது. அதன் பிறகு அதை ஆராய்ந்து பார்க்கையில் அதிகமாக FAKE ID இருந்தது தெரிய வந்தது.

5500 வாக்குகள் பணமதிப்பிழக்கத்தை ஆதரித்து இருந்துள்ளது.அதில் எனது நண்பர்கள் 21நபர்கள் மட்டுமே,மீதம் உள்ள அனைத்து வாக்குகளும் காசு கொடுத்து fake id -கள் மூலமாக ஆதரித்து வாக்களித்துள்ளன,அந்த FAKE ID முகநூல் கணக்கில் பாரத் இந்துஸ்தான்,நமது இந்தியா,பாணபத்ர ஓணாண்டி போன்ற பெயர்களுடனும் மற்றும் அந்த முகநூல் கணக்கில் நரேந்திர மோடி புகைப்படங்கள்,அகண்ட பாரதம்,விவேகானந்தருடைய புகைப்படம்,சில ஜாதி தலைவர்கள் புகைப்படங்களும் இடம் பெற்றுந்திருந்தது.இதில் பாதி நபர்கள் பீஹார் டெல்லி என வடமாநிலங்களை சேர்ந்தவர்கள்,அவர்கள் என்னை முகப்புத்தகத்தில் பின்தொடர்வதற்கான அவசியமே கிடையாது. நான் பேசுவதெல்லாம் பாரம்பரிய கால்நடை, விவசாயம், சுற்றுசூழல்.

இது பிஜேபினுடைய ஆதரவாளர்கள் பணமதிப்பிழக்கம் வெற்றி அடைந்தது என காண்பித்துக்கொள்வதற்காக FAKE ID-கள் மூலமாக செய்துள்ளனர்.

வலதுசாரி கட்சிகள் தான் அதிகமாக போலி செய்திகளை பரப்புகின்றனவா ?

100% உண்மை 2012-வரைக்கும் இது போன்ற தவறான செய்திகளை பரப்புவது மிக மிக குறைவு சில கட்சிகள் பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவிலான தவறான செய்திகளை பரப்புவார்கள்,ஆனால் வலதுசாரிகளுக்கு பிடிக்காதவர்களை பற்றின செய்திகளை அதிகமாக பரப்புகின்றன உதாரணத்திற்கு கலைஞர் திருட்டு ரயில் ஏறி வந்தார்,காமராஜரை தவறாக கூறினார் என கூறும் வலதுசாரி சித்தாந்தத்தை கொண்டவர்கள் தான், டெல்லியில் காமராஜர் வீட்டிற்கே தீ வைத்தனர். காமராஜர் மீது இவர்களுக்கு நமக்கு இருப்பதை போன்று மரியாதை எதுவும் கிடையாது. திராவிட அரசியல் பேசுபவர்களும் காமராஜரை மதிப்பார்கள். அவரை பற்றி பேசி விட்டு தான் அண்ணாவை பற்றியும் கலைஞரை பற்றியும் பேசுவார்கள். இது போல் பொய் பிரச்சாரம் செய்வதில் இவர்கள் கில்லாடிகள் அதை திறமையாகவும் செய்வார்கள்.
வாஜ்பாய் காலத்தில் இது போன்று பொய்கள் இல்லை. 2012-இல் இருந்து தான் ஆரம்பித்தார்கள்.
சமூகவலைதளங்களை முழுவதுமாக தவறாக கையாள்கின்றனர்.குஜராத்தில் இல்லாத இடங்களை எல்லாம் இருப்பது போல் போட்டோஷாப் செய்து மோடி அவருடைய ஆட்சியில் குஜராத் நன்றாக வளந்துள்ளது எனவும் தவறாக செய்திகளை பரப்பி பொய் பிரச்சாரம் செய்தனர். அதேபோல் மகாத்மா காந்தியை பற்றி தவறாக சித்தரித்தனர்,நேரு மிகவும் மோசமானவர் எனவும் சித்தரித்தனர். இதுபோல் எல்லாம் வாஜ்பாயோ அத்வானியோ செய்தது இல்லை.

Fake news பற்றி உங்களுடைய பார்வை என்ன ?

Fake news பற்றின விழிப்புணர்வு கண்டிப்பாக இப்பொழுதுள்ள சூழலில் மிக மிக அவசியம்.whats app யில் தற்பொழுது ஒரு செய்து வருகிறது என்றால் அது உண்மையா பொய்யா என்று பார்ப்பவர்கள் மிக மிக குறைவான நபர்கள்.இதில் இரண்டு வகை உள்ளனர் அவர்களுக்கு பிடித்தமான செய்திகள் தவறான உண்மையா என பார்க்காமல் பகிர்பவர்கள்,இன்னொரு வகையினர் எதை கிடைத்தாலும் பகிர்பவர்கள்.
இதில் இரண்டாவது வகையினருக்கு எது உண்மை எது பொய் என்று அவசியமாக எடுத்துக்கூறவேண்டும்.முதல் வகையினர் எது செய்தாலும் மாறமாட்டார்கள். அவர்கள் வேண்டுமென்றே பொய் பரப்புரை செய்து கொண்டே தான் இருப்பார்கள்.

இந்த FAKE id கள் மூலம் நீங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டீர்கள்?

இவர்கள் அதிகமாகவே troll செய்தனர்.பின் இவர்கள் அனைவரையுமே முகநூலில் ப்ளாக் செய்தேன்.இதற்கு பின் இவர்கள் பதில் கூறமுடியாத அளவிற்கு அடுத்த வாக்கெடுப்பு நடத்தினேன் . அது தமிழகத்திற்கு மிகவும் ஆபத்து என எதை நீங்கள் நினைகிறீர்கள் ? பிஜேபி ?மோடி ? என்ற வாக்கெடுப்பு.

முக்கியமாக தங்களுடைய தாய் மொழியில் கணக்கெடுப்பு நடத்தினால் இவர்கள் வருவதில்லை,ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் செய்தாலே வருகின்றன.

இவர்களுடைய பிரச்னையே தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் எளிமையாக இவர்களுடைய மீம்ஸ் மூலம் இவர்களை troll செய்து விடுகின்றன.

YOU TURN பற்றி உங்களுடைய அபிமானம் ?

எது சரியான தகவல் எது தவறான தகவல் என்று ஆராய்ந்து கூறுவதில் you turn மிகவும் சிறப்பாக பணியாற்று கின்றன.அவர்களுடைய குழுவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

– ராஜலட்சுமி (இண்டேன்ட்)

Please complete the required fields.
Back to top button
loader