நாம் தமிழர் கட்சியின் சீமான் பற்றி பரப்பப்பட்ட வதந்திகளின் தொகுப்பு !

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராகவும், அவர் பேசாத விசயங்களை பேசியதாகவும் பல பொய் செய்திகளும், வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டிருக்கிறது. அவ்வாறு பரப்பப்பட்ட பொய் செய்திகளை இந்த தொகுப்பில் காண இருக்கிறோம்.

1. எள்ளு வய பாடல் குறித்து சீமான் : 

ஊடகவியலாளர் விஷன் ஒரு நேர்காணலில், ஒரு அரசியல் தலைவரைத் தான் சந்தித்த போது “எள்ளு வய புக்களையே” பாடல் எனது நாட்டுப்புறப் பாடலை தழுவித்தான் எடுக்கப்பட்டது என அவர் கூறியதாகக் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, சீமான் தான் அந்த தலைவர் என சமூக வலைத்தளங்களில் பரவியது.

இது குறித்து அப்பாடலின் ஆசிரியர் யுகபாரதியை தொடர்பு கொண்டு பேசிய போது, “சீமான், வெற்றிமாறன் இடையே நல்ல நட்புறவு உள்ளது. அந்தப் பாடலை பொறுத்தவரை நாட்டுப்புறப் பாடலாக அவர் பாடிய மெட்டின் தழுவல் உண்டு. அவர் பாடியது பிடித்துப்போய் அதிலிருந்து தொடங்கியதே தான் இந்தப் பாடல் எனக் கூறினார்.

மேலும் படிக்க : அசுரனின் எள்ளு வய பூக்களையே பாடலின் மெட்டு சீமான் பாடிய நாட்டுப்புற பாடலை தழுவியது உண்மையே !

2. பாஜக தலைவர்களுடன் சீமான் ரகசிய சந்திப்பு

2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி சீமான் பாஜக தலைவர்களை ரகசியமாக சந்தித்ததாக புகைப்படம் ஒன்றினை கொண்டு தினகரன் செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால், அந்த புகைப்படம் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி, நியூஸ் 7 தமிழ் செய்தி சேனலில் சிறப்பு பட்டிமன்றத்திற்காக கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

மேலும் படிக்க :  பாஜக தலைவர்களை சீமான் ரகசியமாக சந்தித்ததாக தினகரன் வெளியிட்ட தவறான செய்தி !

3. சீமான் போலி மதுபான ஆலை சீல் : 

சீமானுக்குச் சொந்தமான போலி மதுபான ஆலையை காவல்துறை கண்டுபிடித்து சீல் வைத்ததாக நியூஸ் கார்ட் ஒன்று பரப்பப்பட்டது. உண்மையில் அந்த செய்தியில்  “துறையூர் அருகே இயங்கி வந்த போலி மதுபான ஆலையைக் கண்டுபிடித்த போலீசார்!” என்றே உள்ளது. அதில் நாம் தமிழர் என்றோ, சீமான் என்றோ குறிப்பிடப்படவில்லை.

மேலும் படிக்க : போலீஸ் சீல் வைத்த போலி மதுபான ஆலை சீமானுக்கு சொந்தமானதா ?

4. சீமான் தன் மகனுக்கு திருப்பதியில் துலாபாரம்

2021-ல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மகன் மற்றும் மனைவியுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று துலாபாரம் கொடுத்ததாக இப்புகைப்படம் வைரல் செய்யப்பட்டது.

படிக்க : சீமான் தன் மகனுக்கு திருப்பதியில் துலாபாரம் கொடுத்த புகைப்படமா ?

ஆனால், அது செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் எனக் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

5. அத்திவரதர் தரிசனம் 

2019ல் சீமான் தனது குடும்பத்துடன் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. ஆனால், அது முன்னாள் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் காளிமுத்துவின் நினைவிடத்தில் சீமான் தனது குடும்பத்துடன் மரியாதை செலுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

மேலும் படிக்க : அத்திவரதரை தன் குடும்பத்துடன் சென்று தரிசித்தாரா சீமான் ?

6.சீமான் பிரபாகரன் பற்றிக் கூறியதாக வதந்திகள் : 

2021ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தன் காலில் விழுந்தார் எனச் சீமான் கூறியதாக  வீடியோ ஒன்று பேஸ்புக்கில் பரவியது. ஆனால், சீமானின் அந்த முழு நேர்காணல் வீடியோவில் பிரபாகரன் தமிழ்த் திரைப்படங்கள் குறித்து தன்னிடம் பேசியதாக சில தகவல்களைக் கூறுகிறார்.

அவ்வாறு அவர் கூறியதில், தமிழ்த் திரைப்பட உலகம்.. நமக்கென்று ஒரு அடையாளம் மிச்சம் இருக்கு.. நடிகர் திலகம் இருக்காங்க, அதுக்கு அப்பரோ நம்ம வடிவேலு.. வேற யாரு நமக்கு அடையாளமா தெரிலைங்க என பிரபாகரன் கூறியதை வடிவேலுவிடம் கூறினேன். அப்படிச் சொல்லும் போது தெய்வமே என தன் காலில் விழ வந்ததாகக் கூறியுள்ளார்.

வடிவேலு தனது காலில் விழ வந்ததாகச் சீமான் கூறியதைப் பிரபாகரன் விழுந்ததாகத் தவறாக எடிட் செய்து பரப்பினர்.

மேலும் படிக்க : பிரபாகரன் தன் காலில் விழுந்ததாக சீமான் கூறினாரா ?

இதேபோல், 2020ல் தன்னுடைய மகன் பிரபாகரன் தன் நெஞ்சில் படுத்து தூங்குவார் என சீமான் கூறியதை விடுதலை புலிகள் பிரபாகரன் பற்றி பேசும் காட்சியோடு இணைத்து எடிட் செய்து பரப்பி இருந்தனர்.

மேலும் படிக்க : விடுதலை புலிகள் பிரபாகரன் என் நெஞ்சில் சாய்ந்து தூங்குவார் என சீமான் கூறினாரா ?

7. சீமான் ஆரியத்திற்கு ஆதரவு எனப் பொய் !

“ திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தைக் கைக்கொள்வது ஒன்றும் தவறில்லை. திராவிடமா ? ஆரியமா ? என்றால் நாம் தமிழர் கட்சி ஆரியத்தின் பக்கமே நிற்கும்  ” எனச் சீமான் பேசியதாக IBC தமிழ் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளைங்களில் பரப்பப்பட்டது.

ஆனால், ஆரியம்,திராவிடம் வெவ்வேறு இல்லை. இரண்டும் ஒன்றுதான்!. இந்தியன், திராவிடம் இரண்டுமே எங்கள் தமிழ்த் தேசியத்தின் எதிரிகள், ஆரியம் வேறு இந்தியன் வேறு அல்ல ” என்றுதான் சீமான் பேசியுள்ளார்.

மேலும் படிக்க :  நாம் தமிழர் கட்சி ஆரியத்தின் பக்கம் நிற்கும் என்றாரா சீமான் ?

8.பொய்யான அறிக்கைகள் : 

2016ன் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் சீமான் அளித்த உறுதிமொழிப் பத்திரத்தில் சீமானின் பெயர் சைமன் எனவும், அவர் தந்தை பெயர் சபஸ்டியன் என்றும் குறிப்பிட்டதாக எடிட் செய்யப்பட்ட தேர்தல் உறுதிமொழிப் பத்திரம் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க :  தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தில் சீமானின் பெயர் சைமன் எனக் குறிப்பிடப்பட்டதா ?

கட்சியின் பணத்தைச் சிலர் கையாடல் செய்து உள்ளதால், புலம்பெயர்ந்து வாழும் ஆதரவாளர்கள் கட்சிக்கு அளிக்கும் நிதியினை தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறு அறிக்கை வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. ஆனால், அது போலியாக எடிட் செய்யப்பட்டது. 

மேலும் படிக்க :  சீமான் தன் வங்கி கணக்கிற்கு கட்சி நிதியை வழங்குமாறு கேட்டதாக பரவும் போலியான அறிக்கை !

9. கோட்சேவிற்கு மலர் அஞ்சலி செலுத்துவதாக வதந்தி 

காந்தி ஜெயந்தியன்று காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவிற்கு சீமான் மலர் அஞ்சலி செலுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. ஆனால், நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் அத்தகைய பதிவுகள் எதுவும் இல்லை. அது எடிட் செய்யப்பட்டது.

மேலும் படிக்க : சீமான் கோட்சேவிற்கு அஞ்சலி செலுத்துவதாக ஃபோட்டோஷாப் வதந்தி !

போலி நியூஸ் கார்டுகள் : 

இவற்றை தவிர்த்து, சீமான் கூறியதாக பல்வேறு பொய்யான செய்திகள் நியூஸ் கார்டுகளில் எடிட் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் தவறாக வைரல் செய்யப்பட்டு இருக்கின்றன.

படிக்க :  சீன மேலாளரை வந்தேறி என்றதால் நா.த.கட்சி உறுப்பினருக்கு சிங்கப்பூர் அரசு தடையா ?

படிக்க : புஷ்பா படத்தை பார்ப்பவர்கள் வந்தேறிகள் என சீமான் கூறினாரா ?

படிக்க : எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என சீமான் கூறியதாக பரவும் விஷம வதந்தி !

படிக்க : எலிசபெத் ராணி, சீமான் வைத்துப் பரப்பப்படும் நையாண்டி அறிவிப்பை பகிர்ந்த துக்ளக் குருமூர்த்தி

படிக்க : சிறைக்கு பயமெனில் விசத்தை குடியுங்கள் என சீமான் கூறியதாகப் போலிச் செய்தி !

படிக்க : அடுத்தமுறை பிரதமர் மோடியை நானே வரவேற்பேன் என சீமான் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

Please complete the required fields.
Back to top button
loader