மத கலவரம் உள்பட போலிச் செய்திகளை வெளியிடும் TNnews24 இணையதளம் !

ஒரு கொள்கையைச் சார்பாக பதிவிடும் இணைய செய்தித் தளங்கள் பற்றி பெரும்பாலும் மக்கள் அறியாமல் உள்ளனர். இதில், வட இந்தியாவில் postcard என்ற வலதுசாரி கொள்கையை பரப்பும் இணைய செய்தி நிறுவனத்தின் நிறுவனர் மகேஷ் மத கலவரத்தை தூண்டும் விதத்தில் செய்தி வெளியிட்டதாகக் கைது செய்யப்பட்டார்.

Advertisement

தமிகத்திலும், postcard போன்ற இணைய செய்தி தளம் ஒன்று மத கலவரத்தைத் தூண்டும் விதத்தில் தவறான செய்திகளையும், போலியான தகவல்களையும் பதிவிட்டு வருகிறது.

TNnews24 என்ற இணைய செய்தி தளத்தில் திருபுவனம் ராமலிங்கம் கொலை பற்றிய தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர். இராமலிங்கம் கொலையில் கைதானவர்களை ஜாமீனில் எடுக்க ஜமாத் நிர்வாகம் பணம் திரட்டி வருவதாக எழுதியுள்ளனர்.

மேலும், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ஜமாத் நிர்வாகம் பணம் திரட்டி வருவதாக கூறி ஒரு வாட்ஸ் ஆஃப் பார்வர்ட் செய்தி ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். ஹெச்.ராஜா பதிவும் செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஜமாத் நிர்வாகம் பணம் திரட்டுவதாக எழுந்த சர்ச்சைக்கு அந்நிர்வாகம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “  தவறாக பரவும் அவதூறு பரப்புரையை கண்டிப்பதாகவும், குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் ” என கூறியுள்ளனர்.

மதம் சார்ந்த வன்முறை நிகழக் கூடாது என அனைவரும் நினைக்கும் நேரத்தில் மத வன்முறைகள் நிகழ சிலர் நினைக்கின்றார்கள் என தோன்றுகிறது.

மதன் கௌரி :

மதன் கௌரி சர்ச்சையிலும் TNnews24 இணையதளத்தில் வேறு விதமாக தவறான செய்தியே பதிவிடப்பட்டது. மதன் கௌரியிடம் தொடர்பு கொண்டு கேட்டதாகவும் அதற்கு தன் மீது வீண் பழி சுமத்துவதாக அவர் கூறியதாகப் பதிவிட்டு உள்ளனர்.

இது முற்றிலும் தவறான செய்தியாக பார்க்க வேண்டும். மதன் கௌரி சர்ச்சையில் நடந்தவை பற்றி தெளிவாக youturn-யிடம் நேரில் தெரிவித்து இருந்தார். நாமும் அதற்காக கட்டுரை மற்றும் வீடியோ பதிவுகள் வெளியிட்டு இருந்தோம்.

படிக்க : சர்ச்சைகளுக்கு மதன் கௌரியின் பதில் !

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button