யு.ஜி.சியின் போலி பல்கலைக்கழங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம், உ.பி இரண்டாமிடம் !

இந்தியாவில் செயல்பட்டு வரும் போலி பல்கலைக்கழங்களின் பெயர் பட்டியலை பல்கலைக்கழக மானியாக் குழு (யுஜிசி) அதிரடியாக வெளியிட்டுள்ளது. யுஜிசி ஒவ்வொரு ஆண்டும் போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிடுகிறது.

ஆகஸ்ட் 24 தேதி அன்று ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் யுஜிசி எனும் பல்கலைக்கழக மானிய குழு இந்த வருடத்திற்கான பட்டியலை வெளியிட்டது.


இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் தான் அதிக போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. டெல்லியில் மட்டும் 8 போலி பல்கலைக்கழங்கள் செயல்படுவது சற்று அதிர்ச்சியான ஒன்றாகும்.

அதற்கு அடுத்த நிலையில் அதிக போலி பல்கலைக்கழங்களை கொண்ட மாநிலமாக உத்திர பிரதேசம் இருக்கிறது. உத்திர பிரதேசத்தில் மட்டும் நான்கு போலி பல்கலைக்கழங்கள் செயல்பட்டு வருகிறது.

இதைப் போன்று, மேற்கு வங்கம், ஒடிசாவில் தலா இரண்டு போலி பல்கலைக்கழங்கள் செயல்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரியில் தலா ஒரு போலி பல்கலைக்கழங்கள் செயல்படுகிறது என்ற தகவலும் யு.ஜி.சி வெளியிட்டது.

இந்த ஆண்டின் போலிப் பல்கலைக்கழங்களின் பெயர் பட்டியலில் மொத்தம் 21 போலி பல்கலைக்கழக பெயர்களை வெளியிட்டது மூலம் அங்கு ஏற்கனவே பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த பட்டியலில் தமிழகத்தில் ஒரு போலி பல்கலைக்கழகம் கூட இல்லாதது மிக முக்கியமானது.

யுஜிசி சட்ட விதிகளை மீறி செயல்பட்டு வரும் 21 அங்கீகரிக்கப்படதா கல்வி நிறுவனங்கள் போலியான பல்கலைக்கழகங்கள் என அறிவிக்கப்பட்டு, அந்தப் போலி பல்கலைக்கழகங்களுக்கு எவ்விதமான பட்டமளிக்கு அதிகாரமும் அளிக்கப்படவில்லை என்று யுஜிசி தெளிவாக கூறியுள்ளது.

Link : 

UGC Fake Universities

Please complete the required fields.




Back to top button
loader