விவசாயிகள் போராட்டத்தில் இறந்தவர்கள் என தவறுதலாக பரவும் பழைய புகைப்படங்கள் !

டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரி உள்ளிட்ட பகுதிகளில் பல நாட்களாக நடைபெற்று வரும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் கடுமையான குளிரின் காரணமாக உயிரிழந்துள்ளனர். சாலை விபத்திலும் சிலர் இருந்துள்ளனர்.

Advertisement

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக அவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக சிங்கு மற்றும் டிக்ரி பகுதியில் உள்ள விவசாய சங்கங்கள் தெரிவித்ததாக டிசம்பர் 17-ம் தேதி இந்திய எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையில், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் என பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அவற்றில் சில புகைப்படங்கள் உண்மையானவையாக இருந்தாலும், சில பழைய புகைப்படங்களும் தவறுதலாக வைரலாகவும் செய்கின்றன.

Archive link 

சாலையில் இறந்த நிலையில் இருக்கும் முதியவரின் இப்புகைப்படம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக முகநூல் பதிவில் இடம்பெற்று இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தின் டாரன் டாரன் எனும் நகரில் இறந்தவர் உடலை கண்டதாக முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், இறந்தவர் குறித்தும், எப்பொழுது இறந்தார் என்கிற விரிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

Advertisement

மற்றொரு வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் சீக்கிய முதியவர் 2015-ல் உயிரிழந்த பாபு சூரத் சிங் கால்சா ஆவார். 82 வயது மனித உரிமை ஆர்வலரான பாபு சூரத் சிங் கால்சா, சீக்கியர்கள் உள்பட சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி 277 நாட்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர். 2015-ல் உயிரிழந்த மனித உரிமை ஆர்வலரின் புகைப்படம் தவறுதலாக விவசாயிகள் போராட்டத்துடன் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : வேளாண் சட்ட விளம்பரத்திற்கு போராட்டத்தில் ஈடுபடும் நபரின் புகைப்படத்தையே பயன்படுத்திய பஞ்சாப் பாஜக !

விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகையில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை பகிர்வதாக எண்ணி தவறான புகைப்படங்களை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Links : 

INDIA’S MINORITY: Hunger strike lasting 277 days later and still no media coverage

‘Delhi Chalo’ march: Farmers say will prepare list of deaths during protest

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button