Articles

Morattu single-களுக்கு மட்டும்.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 காதலர் தினமாக கொண்டாடப்படுவதை கண்டு இருப்போம். ஆனால், சமீப காலமாக Singles அல்லது morattu singles என மீம்கள், வீடியோக்கள் வைரலாகிறது.

Advertisement

முன்பு எல்லாம் காதலர் தினத்திற்கு ஜோடியாக வரும் காதலர்களுக்கு சலுகைகள் வழங்கி கொண்டாடியதை பார்த்து இருப்போம். ஆனால், 2019 காதலர் தினம் வித்தியாசமாக  morattu singles-களுக்கு சென்னை ஹோட்டல்களில் பல சலுகைகள் வழங்கி உள்ளனர்.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ”  தொப்பி வாப்பா பிரியாணி ” என்ற உணவகத்திற்கு பிப்ரவரி 14 அன்று வரும் singles-களுக்கு மட்டும் ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம் ! சமூக வலைதளங்களில் பகிர்வோருக்கு முன்னுரிமையும் அளிக்கிறார்கள்.

இங்கு morattu singles-களுக்கு மட்டும்  இலவச பிரியாணி. ஆழ்வார்பேட்டை மற்றும் கேளம்பாக்கத்தில் உள்ள மதராஸி பிரியாணி கடையில் பிப்ரவரி 14-க்கு மதியம் 3 மணி முதல்  4 மணி வரை இலவசமாக பிரியாணி வழங்கப்படுகிறது.

அண்ணாநகர் மற்றும் கொளத்தூரில் உள்ள bikes and burgers -ல் morattu singles-களுக்கு ஒரு burger வாங்கினால் மற்றொரு burger இலவசம்.

” Morattu Single um Mukka tumbler Tea um ” 

morattu singles பெரும்பாலும் விரும்புவதில்  டீ -யும் ஒன்று. காரணம், அதிலும் single இருப்பதால் தான். அதை கொண்டாட துரைபாக்கம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள chai kanth-ல் 3 மணி முதல் 5 மணி வரை morattu singles-களுக்கு Free Tea வழங்குகின்றனர்.

அசோக் நகரில் உள்ள sri arya silks கடையில் வாங்கும் புடவைகளுக்கு(silks) 20% தள்ளுபடி வழங்குவதாக அறிவித்து உள்ளனர். இங்கு singles அல்லது committed என்ற பாகுபாடு இல்லை. அம்மாக்கு புடவை வாங்க நினைக்கும் singles கூட அங்கு சென்று சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இச்சலுகை இந்த மாதம் முழுவதும் வழங்கப்படும் எனபது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 14-ஐ singles மற்றும் morattu singles day-வாக மாற்றிக் கொண்டாடியப் பெருமை தமிழக மீம்  க்ரியேட்டர்களையே சென்றடையும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




Back to top button