வலதுசாரி போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் !

சில தினங்களுக்கு முன்பு கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் அதிகாலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். பின் போலீஸ் பாதுகாப்பு உடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இரு பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் சென்றதால் அம்மாநிலத்தில் போராட்டங்கள் வெடித்தது. முழு கடை அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்தனர்.

Advertisement

கேரளாவில் பல்வேறு பகுதியில் பிஜேபி கட்சியின் ஆதரவாளர்கள், பல இந்து அமைப்புகளால் போராட்டங்கள் கலவரங்களாக மாறின. பேருந்துகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியது.

இந்து அமைப்பினர் மற்றும் பிஜேபி ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவத்தைக் கண்ணீருடன் வீடியோ எடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிகப் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இந்திய அளவில் பல செய்திகளில் இப்படங்கள் வெளியாகின.

கைரளி என்ற தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண் பத்திரிகையாளர் ஹாஜிலா அலி பாத்திமா என்பவர் கலவரக்காரர்களால் தாக்கப்பட்ட போதும் வலியுடன் கண்ணீர் வடித்துக் கொண்டே நடந்த கலவரத்தை வீடியோ எடுத்து உள்ளார்.

போராட்டக்காரர்கள் தன்னை பின்னால் தகாத இடத்தில் எட்டி உதைத்தனர். வலியுடன் மீண்டும் வீடியோ எடுக்க முயற்சித்த போது கேமராவை பறிக்க முயற்சித்தனர். கலவரம் நடப்பதை வீடியோ எடுக்க வேண்டும் என்பதால் வலியுடன் கலவரத்தை படம் பிடித்தேன் “ என ஹாஜிலா தெரிவித்து இருந்தார்.

Advertisement

கண்ணீருடன் ஹாஜிலா வீடியோ எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. ஹாஜிலா மட்டுமின்றி திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்கள் பலரும் தாக்கபட்டுள்ளனர்.

பிஜேபி, இந்து அமைப்பினரால் தாக்கப்பட்ட பத்திரிகையாளர் ஹாஜிலா கண்ணீருடன் இருக்கும் புகைப்படத்தை வைத்து கேரள கம்யூனிஸ்ட் அரசு ஐயப்பன் பக்தர்களை தாக்குவதை பார்த்து கண்ணீருடன் வீடியோ எடுப்பதாக தவறாக பதிவிட்டு வருகின்றனர். இதில் வதந்தி பரப்புகின்றனர்.

கோவிலில் குறிப்பிட்ட வயது உடைய பெண்கள் நுழையக் கூடாது என போராட்டம் செய்பவர்கள் தான் பெண் பத்திரிகையாளரையும் தாக்கியுள்ளனர்.

இதைத் தவிர கேரளாவில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவால் மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் போலீஸ் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

Photos of tearful woman journalist battling attacks during Sabarimala protests go viral

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம்.
எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close