5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு.

இந்தியா முழுவதும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்ற செய்தி வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தி பதிவிடப்படுகிறது.
தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது என்பது அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
ஆனால், தமிழகத்திலும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கொண்டு வர வாய்ப்புகள் உள்ளன என்பதை சமகால நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன.
பொதுத் தேர்வுகள் அதிகரிப்பு மாணவர்கள் பள்ளி படிப்பை தொடராமல் இருக்கச் செய்யும் காரணங்களாக மாறக்கூடும்.
இந்திய அளவில் 12-ம் வகுப்பு வரை பள்ளி படிப்பை முழுமையாக முடிப்பவர்களின் சதவீதத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது. அங்கு 30 % மாணவர்கள் மட்டுமே இன்றும் பள்ளி படிப்பை முழுமையாக முடிக்கின்றனர். 70% மாணவர்கள் பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காமல் உள்ளனர்.
இது தொடர்பான பல தகவல்கள் வீடியோவில்,
ஆதாரங்கள் :
Cops ‘study’ dropouts to curb crime
Crime data: Snatchers arrested in Delhi mostly first timers, school dropouts
What is the dropout rate among schoolchildren in India?