2021-22 உணவுப் பாதுகாப்புக் குறியீடு : குஜராத்தை முந்தி தமிழ்நாடு முதலிடம் !

உலக உணவு தினத்தை முன்னிட்டு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) 4-வது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டை(SFSI) ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மனுஷ்க் மாண்டவியா வெளியிட்டார்.

2021-2022 உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் குஜராத் மாநிலத்தை முந்தி தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது, கடந்த முறை முதலிடத்தில் இருந்த குஜராத் தற்போது இரண்டாமிடத்தில் உள்ளது.

மாநிலங்களின் உணவுப் பாதுகாப்பு தரவரிசையானது, மனித வளங்கள் மற்றும் நிறுவன தரவு, இணக்கம், உணவு சோதனை வசதி மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, நுகர்வோர் அதிகாரமளித்தல் ஆகிய 5 அளவுருக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

2021-22 குறியீட்டில், தமிழ்நாடு 80 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது, இரண்டாம் இடத்தில் குஜராத் (77.5), மூன்றாம் இடத்தில் மகாராஷ்டிரா (70), நான்காம் இடத்தில் இமாச்சலப் பிரதேசம் (65.5), மேற்கு வங்கம் மற்றும் மத்தியப்பிரதேசம் 58.5 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது.

சிறிய மாநிலங்களில் கோவா முதலிடத்திலும், மணிப்பூர் இரண்டாமிடத்திலும், சிக்கிம் மூன்றாவதாக உள்ளன. யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரையில், முதலிடத்தில் ஜம்மு காஷ்மீர் , 2-ம் இடத்தில் டெல்லி , 3-ம் இடத்தில் சண்டிகர் உள்ளது.

கடந்த ஆண்டு வெளியான 2020-21 குறியீட்டில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருந்தது, குஜராத் முதலிடத்தில், கேரளா இரண்டாம் இடத்தில் இருந்தன.

இந்த குறியீடானது, நாட்டில் உணவு பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைபில் போட்டி மற்றும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க 2018-19-ல் தொடங்கப்பட்டது. குடிமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதிசெய்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்கப்படுத்த நடவடிக்கையாக எடுக்கப்பட்டது.

link : 

Report on State Food Safety Index 2021-2

Please complete the required fields.
Back to top button
loader