This article is from Oct 01, 2020

மாணவர்களுக்கு இலவச லேப்டாப், செல்போன், 10ஜிபி இன்டர்நெட் தருவதாக வதந்தி !

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பான்மையான மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள தேவையான ஸ்மார்ட்போன், இன்டர்நெட் வசதியின்றி தவித்து வருவதை கண்டு வருகிறோம்.

இந்நிலையில்தான், கொரோனா சூழலில் மாணவர்கள் கல்வி கற்க அரசாங்கம் இலவசமாக லேப்டாப், ஒரு நாளைக்கு 10ஜிபி வீதம் இலவச இன்டர்நெட் மற்றும் ஸ்மார்ட் போன் வழங்குவதாகக் கூறி ஃபார்வர்டு தகவல் பரவி வருகிறது.

அரசாங்கம் வழங்கும் இலவசத்தை பெற கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விவரங்களை நிரப்ப வேண்டும் எனக் கூறியுள்ளார்கள். அரசாங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி இவ்வாறு பரவும் ஃபார்வர்டு செய்திகள் திட்டமிட்ட மோசடி செயலாகும்.

கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று பார்த்தால், உங்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்கிறார்கள். அங்கு கேட்கப்படும் விவரங்களை அளித்த பிறகு இந்த பதிவை உங்களின் வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் பகிர வேண்டும் என்கிற நிபந்தனை இருக்கிறது.

மேலும் படிக்க : ராக் பணம் தருவதாக பரவும் பொய்யான செய்தி| மோசடியில் சிக்காதீர்கள் !

 மேலும் படிக்க : பணம் கிடைக்கும் என நினைத்து கமெண்ட் செய்யும் மக்கள்| ஜாக்கிசான் பெயரில் மோசடி !

கொரோனா சூழலில் மக்களை மோசடிக்குள் சிக்க வைக்கும் எண்ணற்ற பதிவுகள் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கின்றன. இணைய மோசடிக் குறித்து யூடர்ன் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். இதுபோன்ற மோசடிகளில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க : ஒவ்வொரு குடிமகனுக்கும் 5 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக பரவும் மோசடி செய்தி !

Please complete the required fields.




Back to top button
loader