டெல்லி அரசு போக்குவரத்தில் பெண்களுக்கு இலவச பயணம் – கேஜ்ரிவால் அறிவிப்பு.

இந்திய தலைநகரான டெல்லியில் அரசு போக்குவரத்து வாகனங்களில் பெண்களுக்கான பயணம் வருகிற அக்டோபர் 29-ம் தேதி முதல் இலவசம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் 73-வது சுதந்திர தின நிகழ்ச்சியானது டெல்லியில் உள்ள chhatraasal மைதானத்தில் நிகழ்ந்தது. அதில் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், ” ராக்சா பந்தன் தினத்தன்று, நம்முடைய சகோதரிகளுக்கு பரிசு ஒன்றை அளிக்க உள்ளேன். அவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க, அக்டோபர் 29-ம் தேதி முதல் அனைத்து டீடிசி(டெல்லி போக்குவரத்து கார்ப்பரேஷன்) மற்றும் பேருந்து சேவைகளில் பெண்கள் இலவசமாகவே பயணம் செய்யலாம் ” என அறிவித்தார்.
ये क़दम महिलाओं के सम्मान, सुरक्षा, सशक्तिकरण एवं उनके सपने साकार करने की दिशा में बेहद महत्वपूर्ण साबित होगा। https://t.co/iA1qZDkO7h
— Arvind Kejriwal (@ArvindKejriwal) August 15, 2019
இதற்கு முன்பாக ஜூன் மாதம் டெல்லி மெட்ரோவில் பெண்களுக்கு இலவச சேவையை வழங்க திட்டமிட்டு உள்ளதாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து கேஜ்ரிவால் கூறுகையில், ” பெண்களின் பாதுகாப்பு ஆம் ஆத்மி கட்சியின் மிக முக்கியமானது. நாங்கள் இரண்டு முக்கிய முடிவை எடுத்துள்ளோம். முதலில் டெல்லி முழுவதிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது, மற்றொன்று பெண்களுக்கு இலவச அரசு போக்குவரத்து பயணத்தை அளிப்பது ” எனக் கூறியுள்ளார்.
தேசிய தலைநகரான டெல்லியில் 5,500 அரசு போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த திட்டத்திற்கு ரூ.700 கோடி தேவைப்படும். எனினும், இந்த திட்டம் டெல்லி அரசால் மட்டுமே மேற்கொள்ளப்படும், மத்திய அரசின் உதவியையோ அல்லது மானியத்தையோ எதிர்பார்க்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
दिल्ली के सीएम अरविंद केजरीवाल का बड़ा ऐलान, भैया दूज के दिन 29 अक्टूबर से डीटीसी और क्लस्टर बसों में फ्री में सफर कर सकेंगी महिलाएं..#IndiaIndependenceDay#स्वतंत्रतादिवसhttps://t.co/IDpawcdcN8
— Shalu (@Shalupcrf) August 15, 2019
டெல்லியில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான பயணத்தை இலவசமாகியதற்கு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெண்கள் பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளனர். எனினும், தேர்தல் நெருங்கி வருவதால் டெல்லி அரசு இந்த திட்டத்தை அறிவித்து இருப்பதாகவும் சிலர் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.
Free Travel For Women On Delhi Buses From October 29: Arvind Kejriwal
As ‘Gift to Sisters’, Kejriwal Announces Free DTC, Cluster Bus Rides for Women From October 29
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.