14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக டிக்டாக் பிரபலம் பார்கவ் கைது !

விசாகப்பட்டினத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக டிக்டாக் வீடியோக்களால் பிரபலமான சிப்பாடா பார்கவை போக்சோ சட்டத்தின் கீழ் ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
Fun Bucket பார்கவ் என அழைக்கப்படும் சிப்பாடா பார்கவ் ” Oh My God, Oh My God ! ” எனும் காமெடி டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்தவர். நகைச்சுவை வீடியோக்கள் என்பதால் மொழி வேறுபாடு இன்றி இவரின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகவும் செய்தது.
ஏப்ரல் 1-ம் தேதி விசாகப்பட்டினத்தின் பெண்டூர்த்தி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்த போதே இந்த பாலியல் பலாத்கார சம்பவம் வெளியே வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
பார்கவ் மீது போக்சோ சட்டத்தைத் தவிர, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை), 354 ( பெண்களுக்கு எதிரான தாக்குதல் அல்லது கிரிமினல் குற்றம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட பார்கவ் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டு விசாகப்பட்டினம் கொண்டு வரப்பட்டார். இவ்வழக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள திஷா காவல் நிலையத்தில் விசாரிக்கப்படுகிறது.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய திஷா உதவி போலீஸ் கமிஷனர் பிரேம் காஜல் கூறுகையில், ” குற்றம் சாட்டப்பட்டவர் டிக்டாக் வீடியோக்களில் அப்பெண்ணை பார்த்த பின்னர் மீடியா சேனல்களில் வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்து இருந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஃப்ரொபோஸ் செய்து உள்ளார், அதை அப்பெண் நிராகரித்து இருக்கிறார். எனினும், அப்பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை வைத்திருப்பதாகக் கூறி மிரட்டி இருக்கிறார். தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார் ” என நியூஸ்மினிட் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிரும் நபர்களை காவல்துறை எச்சரித்து உள்ளது. மேலும், அவ்வாறு செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
View this post on Instagram
இதற்கிடையில், பார்கவால் பாதிக்கப்பட்ட பெண் என அவருடன் டிக்டாக் வீடியோக்களில் ” Oh My God, Oh My God ” என பேசி நடித்து பிரபலமான நித்யா என்ற பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கிறார்கள். இதற்கு அப்பெண் மறுத்து, வழக்கிற்கும் தமக்கும் சம்மந்தம் இல்லை என விளக்கம் அளிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
Links :
tiktok-star-funbucket-bhargav-arrested-alleged-rape-minor-girl
OMG Nithya Reveals Shocking Facts About Fun Bucket Bhargav