எச்சரிக்கை: சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு பரவும் ஒரே எண்கள்!

புற்றுநோயில் தொடங்கி பல்வேறு பெரும் வியாதிகள், உடல் பாதிப்புகளுக்கான கிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகளை சமாளிக்க முடியாதவர்கள் நன்கொடை பெறும்(Fund Raising) இணையதளங்கள் மூலம் சிகிச்சைக்கான பணத்தை பெறுவதுண்டு. இதற்காக சில இணையதள அமைப்புகளும் இயங்கி வருகின்றன.

Advertisement

அந்தந்த இணையதளங்களில் வெளியிடப்படும் நோயாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் மருத்துவமனை ஆவணங்களை எடுத்து உதவி செய்யுமாறு ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் பகிரவும் செய்கின்றனர்.

ஆனால், அப்படியான நன்கொடை அளிக்குமாறு பகிரப்படும் சில பதிவுகளில் ஒரே ” தொலைபேசி எண் ” இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உதாரணத்திற்காக, 1 வயது குழந்தையின் சிகிச்சைக்கு நன்கொடை அளிக்குமாறு பகிரப்பட்டு வரும் பதிவுகளில் அனிதா என்பவரின் வங்கி விவரமும், 9514121001 எனும் கூகுள் பே/போன் எண்ணும் அளிக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களாக இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

குழந்தையின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ketto எனும் ஃபண்ட் ரைசிங் தளத்தில் இருந்து புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குழந்தைக்கான ஃபண்ட் ரைசிங் முடிந்து சில நாட்கள் ஆகியும் தொடர்ந்து குழந்தையின் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் நிதி கேட்டு பகிரப்பட்டு வருகிறது.

இதேபோல், பலருக்காக நிதி கேட்டு பகிரப்பட்ட பதிவுகளில் 9514121001 எனும் அதே எண்னை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை பார்க்க நேரிட்டது. சில பதிவுகளில் வங்கி கணக்கு விவரங்கள், மருத்துவமனை ஆவணங்கள் ஏதுமில்லாமல் நேரடியாக கூகுள்/ போன் பே எண்ணை மட்டும் இணைத்து பகிர்ந்து வருகிறார்கள்.

இதுகுறித்து ketto இணையதளத்தை தொடர்பு கொண்டு பேசிய போது, ” 1 வயது குழந்தைக்கான ஃபண்ட் ரைசிங் முடிந்து சில நாட்கள் ஆகி விட்டன. நாங்கள் கூகுள்/ போன் பே எண்களை வழங்குவதில்லை. தேவைப்பட்டால் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் தொடர்பு விவரங்களை வழங்குவோம் ” என தகவல் தெரிவித்து இருந்தனர்.

சிகிச்சை பெறுபவர்களின் குடும்பத்தினர் மற்றும் தெரிந்தவர்கள் கூட தனிப்பட்ட முறையில் ஃபண்ட் ரைசிங் செய்வது உண்டு. ஆனால், ஒரே 9514121001 எனும் எண்ணை வழங்கப்பட்டு இருப்பதில் இருந்து, யாரோ தெரிந்தே இப்படி செய்வதாக தெரிகிறது. 9514121001 எண்ணை  தொடர்பு கொண்டால், அழைப்பை எடுக்கவில்லை. பிரபலமானவர்களும், அதிக அளவில் ஃபாலோயர்களை கொண்டவர்களும் தவறான பதிவு என அறிந்து தங்கள் பதிவுகளை நீக்கியும் வருகிறார்கள்.

மருத்துவமனை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படும் எண்ணற்ற ஏழை, எளிய மக்கள் ஃபண்ட் ரைசிங் செய்ய சில இணையதளங்களை அணுகச் செய்கின்றன. இதுபோன்ற பதிவுகளை அனுப்பி இதனை நம்பலாமா வேண்டாமா என யூடர்னிடம் தொடர் கேள்விகள் வருகிறது. சமூக வலைதளங்களில் உதவிக் கேட்டு பகிரப்படும் பதிவுகளில் ஃபண்ட் ரைசிங் முடிந்தும், போலியான மற்றும் லைக்காகவும் சிலர் பகிரவும் செய்கின்றனர். இதுபோன்றவற்றால், உதவி செய்யும் மனம் இருந்தும் தேவைப்படுபவர்களுக்கு உதவிகள் செய்ய முடியாமல் போகிறது.

உங்களுக்கு நன்கொடை அளிக்க மனம் இருந்து, அப்படியான பதிவுகளை கண்டால் சம்பந்தப்பட்ட ஃபண்ட் ரைசிங் இணையதளத்தை ஆராய்ந்து பார்த்து, உதவி தேவைப்படுபவர்களுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு விசாரித்து வழங்கலாம். சரியானவர்களுக்கு உதவி செய்யுங்கள், எச்சரிக்கையாக இருங்கள் !

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button