விளைநிலங்களை காக்க ஃபார்வர்டு செய்யுங்கள் எனும் பதிவு !| ஃபார்வர்டு செய்தால் பிரச்சனை தீருமா ?

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் கிணறுகள் கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் அமைய உள்ளன. இதற்கான கிராமங்களின் பட்டியல் செய்திகளில் வெளியாகி இருந்தது. இந்த செய்தி வெளியான சில தினத்தில் ஒரு கிராமத்தில் சாகுபடி செய்த மற்றும் நடவு நட்ட விளைநிலத்தில் பொக்லைன் இயந்திரங்களை இறக்கி பயிர்களை நாசப்படுத்திய வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.
இந்நிலையில், இதோடு தொடர்புப்படுத்தி இந்த செய்தியை தமிழ்நாடு முழுவதும் ஷேர் செய்யுங்கள், இதனால் மத்திய உளவுத் துறை கவனத்தில் திசை திருப்பும் என்றாலும் கூறி இருந்தனர். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் கிணறுகள் அமைக்கப்படும் என்ற செய்திகள் உண்மையாக இருந்தாலும், விளைநிலத்தில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு பயிர்களை நாசம் செய்தது கெயில் நிறுவனமாகும்.
மே 16-ம் தேதி மேமாத்தூர், காளகஸ்திநாதபுரம் ஆகிய கிராமங்களில் விவசாயிகளின் எதிர்ப்பையும் பொறுப்படுத்தாமல் கெயில் நிறுவனம் குறுவை சாகுபடி விதை விட்ட மற்றும் நடவு நட்டு இருந்த விளைநிலத்தில் பொக்லைன் இயந்திரங்களை இறங்கி பயிர்களை நாசம் செய்து குழாய்கள் அமைக்க முயன்ற போது மக்கள் கொதித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, உமையாள்புரத்தில் விளைநிலத்தில் ராட்சத குழாய்களை அமைக்க பொக்லைன் இயந்திரங்களை இறக்கி நாசம் செய்து உள்ளது கெயில் நிறுவனம். இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
கெயில் நிறுவனம் விவசாய விளைநிலங்களுக்கு அடியில் ராட்சத குழாய்களை அமைத்து எரிவாயுவை கொண்டும் செல்லும் திட்டத்திற்காக வயல்வெளிகளில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறியும் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.
இதில் விவசாயிகளுக்கு உடன்பாடு இல்லை, எதிர்ப்பு தெரிவித்தாலும் பயனில்லை. காவிரி பாசனப் பகுதியில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எரிவாயு எடுத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக மக்கள் எத்தனை போராட்டங்களை முன்னிறுத்தினாலும் அரசுகள் தங்கள் திட்டங்களை செயல்படுத்தி கொண்டே இருக்கின்றனர்.
பரவிய ஃபார்வர்டு செய்தியில் உள்ளதை போன்று சமூக வலைத்தளங்களில் விவசாயம் குறித்த செய்தியை நாடு முழுவதும் பகிர்ந்தாலும் கவனம் ஈர்க்கப்படுமே தவிர, அதற்கான பலம் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது . அதில் குறிப்பிட்டது போன்று இந்திய சட்டத்தில் எந்தவொரு விதியும் இல்லை. மக்கள் பல நாட்களாக களத்தில் இறங்கி போராடினாலும் அவர்களின் கோரிக்கைகள் அரசுகளால் ஏற்கப்படுவதில்லை. பின் எவ்வாறு ஃபார்வர்டு செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
களப் போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள் மட்டுமின்றி உங்கள் பகுதிக்கான நல்ல தலைவரை உருவாக்கினால் ஒழிய விவசாயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒளி பிறக்கும். இல்லையெனில், விவசாயம் பாதிக்கப்படுவதை கைக்கட்டி வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழியில்லை.
Proof :
Parties flay ONGC forstarting pipeline work