This article is from Nov 15, 2018

என்ன ஆகும் கஜா ? weather man

கஜா புயல் இன்று தமிழகத்தை நெருங்கும் என வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கஜா புயலால் தமிழகத்தில் எம்மாதிரியான தாக்கம் இருக்கும் என அரசு மற்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையாக உள்ளனர்.

கஜா புயல் பற்றி Tamilnadu Weatherman புதிய அப்டேட் ஒன்றை அளித்துள்ளார்.

கஜா புயலின் பாதையில் low shear மற்றும் Ideal SST காரணமாக கடுமையான கஜா புயல் வலுவிழந்து போகும் என எதிர்பார்க்க முடியாது. கடலூர் மற்றும் வேதாரண்யம் பகுதியைக் கடக்கும் பொழுது வலுவான புயல் உடன் இன்று இரவு / நள்ளிரவு நேரத்தில் மணிக்கு 100-120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

தற்போது வரும் புயல் வர்தா புயல் உடன் ஒப்பிடக்கூடியது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகியப் பகுதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாவட்டங்கள், அதில் குறிப்பாக நாகப்பட்டினம் அதனுடன் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை பகுதிகளும் முக்கியப் பகுதிகளாக நீள்கின்றன.

“ மணிக்கு 100-120 கி.மீ கரையைக் கடக்கும் நேரத்தில் நாகப்பட்டின மாவட்டத்தில் காற்றின் வேகம் மிக மிக அதிகமாக இருக்கும். புயல் கரையைக் கடக்கும் பகுதி பெரும்பாலும் நாகை மற்றும் வேதாரண்யம் பகுதியைச் சுற்றியே இருக்கலாம் ”

கஜா புயல் கரையைக் கடக்கும் முன்பு வலுவிழந்து போகும் என எதிர்பார்க்க முடியாது, அதற்கு பதிலாக கடுமையான புயலாகக் கரையைக் கடக்கும். இந்த புயல் தமிழகக் கடற்கரையைத் தாண்டி 150-175 kms தொலைவில் இருக்கிறது. மணிக்கு 25-30 கி.மீ வேகத்தில் பயணித்து 6 மணி நேரத்தில் வந்தடையும். கஜா புயல் கடற்பகுதியை இன்று இரவு / நள்ளிரவு நேரத்தில் கடக்கும். இருப்பினும், அதன் போக்கு நவம்பர் 16 அதிகாலை வரை நீடிக்கலாம்.

எப்பொழுது பாதுகாப்பாக இருக்கும் ?

நள்ளிரவில் புயல் கரையைக் கடக்கும் முழுவதிற்கும் 3 – 4 மணி நேரம் எடுக்கும். முதலில் திருவாரூர் மாவட்டத்தில் காற்றின் திசை வடமேற்கு / கிழக்கு திசையில் இருப்பதைக் காணலாம். அதன்பின் காற்று எதிர் திசையில் செல்வதை பார்க்கலாம்.  உதாரணம்-தென் கிழக்கு திசையில். புயல் கடக்கும் மையப்பகுதியில் நேரத்தில் அமைதி நிலவும் அப்பொழுது புயல் கடந்து விட்டதாக எண்ண வேண்டாம். தென்கிழக்கு திசையில் இருந்து காற்று வீசுவது முழுவதுமாக நின்ற பின் புயல் கடந்து விட்டது என்ற முடிவுக்கு வரலாம்.

அதிக மழைப்பொழிவு : ரெட் அலர்ட்

கடலூர் மற்றும் டெல்டாப் பகுதிகளில் NEM நேரத்தில் முந்தைய 25 புயல்கள் பற்றி பார்க்கையில் மழை 24 மணி நேரம் இருந்துள்ளது.

2001-   தானே புயல் – கடலூர்  140 km/hr

2008 – நிஷா புயல் – காரைக்கால் 65 km/hr காற்று மற்றும் ஒரத்தநாடு, தஞ்சாவூரில் 24 மணி நேரத்தில் 657mm மழை பதிவாகி உள்ளது.

2000- கடலூர் புயல் – தொழுவூர் 454mm மழைப் பொழிவு மற்றும் கடலூரில் 120 km/hr வேகத்தில் காற்று.

1993- காரைக்கால் புயல் – காரைக்காலில் 167 km/hr என பதிவாகியுள்ளது.

1991- காரைக்கால் புயல் – காரைக்காலில் 120 km /hr என பதிவாகியுள்ளது.

டெல்டாப் பகுதியில் புயலால் அதிக அளவில் மழைப் பொழிவு இருந்துள்ளது.

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகியப் பகுதிகளில் கனமழை பொழியும்.

மேலும், ராமநாதபுரம், திருச்சி, கடலூர், விருதுநகர் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மலைப்பகுதியான கோயம்புத்தூர், வால்பாறை உள்ளிடப் பகுதியிலும் தேவை இருக்கலாம்.

கஜா புயல் பற்றி சமூக வலைத்தளத்தில் கிண்டல் கேலி செய்து வரும் நிலையில் கஜாவால் நாகப்பட்டினம், திருவாரூர் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் கனமழை பொழியும் என தகவல் தெரிவித்து உள்ளார் Tamilnadu weatherman.

எதற்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருத்தல் நல்லது. நள்ளிரவில் தொடங்கி அதிகாலையில் கஜா புயல் தமிழகக் கரையை கடக்கும்.

Please complete the required fields.




Back to top button
loader