இளம்பெண்ணை கொடூரமாக தாக்கும் வீடியோ | எங்கு நிகழ்ந்தது ?

ந்திய தேசத்தில் ஏதோ ஒரு மூலையில் பெண் குழந்தைகள் முதல் வயதான பெண்மணி வரை ஒவ்வொரு நாளும் கொடுமைகளை சந்தித்து வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது.

அதிலும், பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கிறது. மனித மிருகங்களால் பாலியல் சுரண்டலை அனுபவிக்கும் பெண்களை பாதுகாக்க சட்டமும், அரசும் இமைப் பொழுதிலும் தயாராக இருக்க வேண்டிய கடமை இருக்கிறது.

Advertisement


சமீபத்தில் இந்திய அளவில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்திய அளவில் பல மாநிலங்களில் வெவ்வேறான கதைகள் உடன், சில இடங்களில் என்ன செய்தி என்பதை கூறாமலும் அந்த வீடியோ பரவி இருக்கிறது. அந்த வீடியோ குறித்த தகவலை தெரிவிக்குமாறு யூடர்ன் ஃபாலோயர் ஒருவர் கேட்டுக் கொண்டார்.

ஒரு நபர் இளம்பெண்ணை மிகக் கொடூரமாக கீழே சகதியில் தள்ளி மிதித்து, உடைகளை களைத்து கொடூரமாக தாக்கும் செயல் பார்க்கும் பொழுதே கோபத்தையும் வரவழைக்கிறது. அந்த பெண் அப்படி என்ன தவறு செய்தாள், அனைவரும் பார்க்கும்படி இத்தனை கொடூரமான காரியத்தை செய்ய காரணம் எனத் தேடிப் பார்த்தோம்.

2019 ஆகஸ்ட் 3-ம் தேதி ” Northeast Now ” என்ற இணையதள செய்தியில், அஸ்ஸாம் மாநிலத்தின் நாகன் மாவட்டத்தில் சமாகுரி காவல் நிலையக் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்து இருக்கும் மோவாமாரி என்ற கிராமத்தில் ஜமாலுதீன் என்ற நபர் தன் மகளையே அனைவரின் மத்தியில் கொடூரமாக தாக்கியது குறித்து புகைப்படத்துடன் இடம்பெற்று இருக்கிறது.

Advertisement

பெற்ற மகளை கொடூரமாய் தாக்கியத்திற்கு காரணம் அதனைவிட கொடுமையானது. 15 வயதான தன் மகளை ” விலை மாதுவாக ” செல்ல கூறி, அதனை ஏற்க மறுத்த காரணத்தால் ஊரார் மத்தியில் அந்த இளம்பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளார். இதற்கு ஜமாலுதீன் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார்.

ஜமாலுதீன் தன் மகளை கொடூரமாக தாக்கிய சம்பவத்தை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வைரலாகிய பிறகே வெளி உலகிற்கு இந்த கொடூர சம்பவம் தெரிய வந்துள்ளது. விபச்சாரத்திற்கு செல்ல மறுத்த காரணத்தால் தன் தந்தை மோசமாக தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜமாலுதீன் கைது செய்யப்பட்டார். குற்றவாளி ஜமாலுதீன் ஏற்கனவே குற்றப்பின்னணி கொண்டவர். அவருக்கு பாலியல் தொழிலுக்காக கடத்தலில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஜமாலுதீனுக்கு மூன்று முறை திருமணம் ஆகியும் விவாகரத்து ஆகியுள்ளது. அவர்களின் விவாகரத்திற்கு முன்பாக தன் மனைவிகளையும் விபச்சாரத் தொழில் ஈடுபட கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் இளம்பெண் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தின் உண்மையான காரணம் அறியாமல் காஷ்மீர், கேரளா என பல கதைகளுடன் இந்திய அளவில் வைரலாகியது. தற்பொழுது பாதிக்கப்பட்ட பெண் அவரின் தாயார் உடன் வசித்து வருகிறார்.

கொடூர மனம் கொண்ட மிருகங்களிடம் இருந்து பெண்களைப் பாதுகாப்பு சட்டத்தின் இன்றியமையாத கடமை. அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் நிகழும் இதுபோன்ற சம்பவங்களின் வாயிலாக பெண்களுக்கான பாதுகாப்பை எடுத்துரைத்துக் கொண்டே இருக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு.

Link : 

Nagaon man tortures daughter for refusing prostitution, arrested

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
PHP Code Snippets Powered By : XYZScripts.com
Close
Close