ஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது ?

இந்திய பிரதமர்  கூறிய ”  Chowkidar (பாதுகாவலன்) ” என்ற வார்த்தையுடன் கேள்விகளை இணைத்து  ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக்கி கொண்டிருக்கின்றனர் இந்தியர்கள்.

Advertisement

வட இந்தியாவில் பிரபலமான ஹோலி தினத்தன்று ஹரியானா மாநிலத்தின் குருகிராம் பகுதியில் முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை குண்டர்கள் தாக்கியதோடு, அவர்களை பாகிஸ்தானிற்கு செல்லும்படி கூறியதாக வெளியான வீடியோக்கள், செய்திகள் இந்திய அளவில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

என்ன நடந்தது ? 

மார்ச் 21-ம் தேதி குருகிராமின் போனத்சி பகுதியில் முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த 3 அல்லது 4 பேரை குண்டர்கள் கும்பல் தாக்கியதாக போனத்சி காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கைது செய்யப்பட்ட 6 பேரின் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஹோலி அன்று மாலை 5 மணியளவில் புப் சிங் நகர் பகுதியில் இருந்த காலி இடத்தில சாஜித் என்பவரது மருமகன் மற்றும் உறவினர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு பைக்கில் வந்த இளைஞர்கள் அவர்களை விளையாடக் கூடாது என்றும், வாக்கு வாதத்தில் ” பாகிஸ்தானிற்கு செல்லுங்கள், அங்கு விளையாடுங்கள் ” என கூறியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்த பிரச்சனையில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நேரத்தில் சாஜித் தலையிட்டு பேசிக் கொண்டிருக்கும் போது, சாஜித்-ஐ அங்கிருந்தவர்களில் ஒருவர் அடித்து விட்டு சென்றுள்ளார். பின்பு கும்பலுடன் திரும்பி வந்து சாஜித் வீட்டையும், வாகனத்தையும்  அடித்து நொறுக்கி உள்ளனர், அங்கிருந்த குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரையும் தாக்கியுள்ளனர். இதில், சாஜித்-ஐ துரத்தி சென்று தாக்கியதில் அங்கேயே மயக்கமடைந்து உள்ளார்.

தாக்க வந்த கும்பலுடன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் வாதாடுவது, நொறுக்கப்பட்ட வீடு போன்றவை புகைப்படங்களாக ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது. குண்டர்கள் கும்பல் நடத்திய தாக்கல் அனைத்தையும் அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

ஹோலி தினத்தன்று கிரிக்கெட் விளையாட்டை வைத்து பிரச்சனை செய்து வீடு மற்றும் மூன்று பேரை கடுமையாக தாக்கிய சம்பவம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கேள்விகளுடன் வலம் வருகிறது.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

Gurugram: Outrage after Muslim family thrashed for playing cricket on Holi, asked to go to Pak

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button