கோவையில் முதல்வர் விசிட்: அதிர்ந்த ட்விட்டர், பரவிய வதந்திகள். முழு தொகுப்பு !

சமூக வலைதள அரசியல் என்பது உடனுக்குடன் எதிர்வினை ஆற்றும் ஒரு தளம். நொடிபொழுதில் மாறிக்கொண்டே இருக்கும் இந்த அரசியலைப் பொருத்தவரையில் ஒரு செய்தியின் முக்கியத்துவத்திற்கு வேலை இல்லை. ஏன் செய்திக்கே வேலை இல்லை. அங்கு ஹாஷ்டாக் தான் செய்தி. அந்த செய்தி தான் ஒட்டுமொத்த நிலைபாடாகவும் தோற்றுவிக்கப்படுகிறது. இத்தகைய ட்விட்டர் அரசியல் தொலைக்காட்சி செய்திகள் வரை எதிரொலிப்பதன் காரணம் அது மின்னல் வேகத்தில் உண்டாக்கும் கட்டமைப்புகள். உதாரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெரிதும் பேசப்பட்ட செய்தி ஒன்றை எடுத்துக் கொள்வோம்.
கொரோனா நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நேற்று (மே 30) தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொற்று நடவடிக்கைகளை பார்வையிட சென்றார். அவர் அங்கு செல்லும் முந்தைய நாள் இரவில் இருந்தே ட்விட்டர் பக்கத்தில் GobackStalin எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கில் வர தொடங்கியது. மே 30-ல் அந்த ஹாஷ்டாக் சென்னை உட்பட இந்தியா முழுவதும் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.
இதனை அடுத்து மு.க.ஸ்டாலின் கோவையில் உள்ள ESI மருத்துவமனையில் PPE கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகள் உள்ள வார்டை பார்வையிட, அந்த புகைப்படங்களும் காணொளியும் பெரிதும் பேசப்பட்டு WeStandWithStalin ஹாஷ்டாக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க தொடங்கியது.
ஒன்றியம், தடுப்பூசி மற்றும் பிளவு அரசியல் :
இரண்டு ஹாஸ்டாக்களும் எதிர்வினை ஆற்றும் பொருட்டு தன்னை no.1 ட்ரெண்டிங்கில் நிலைநிறுத்திக்கொள்ள முனைப்பு காட்டும் அதே வேளையில் பிளவு அரசியலுக்கான கட்டமைப்புகளும் ஒரு அரசியல் சார்புடையவர்களால் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
தடுப்பூசி தொடர்பான குற்றச்சாட்டுகள் :
நடந்து முடிந்த 2021 தமிழக தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. எனினும், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. கோவை தெற்கில் பாஜகவை சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார். இதையடுத்து, அம்மாவட்ட மக்களுக்கு எதிரான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் எழுந்தன.
இதையடுத்து கடந்த சில நாட்களாக “கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளில் கோவை மாவட்டத்தை அரசு புறக்கணிக்கிறது” போன்ற பதிவுகளை ட்விட்டர் உட்பட சமூக வலைதளங்களில் அதிகம் காண முடிந்தது.
தனக்கு ஓட்டு போடவில்லை என்பதற்காக கொங்கு மண்டலத்தை ஒட்டு மொத்தமாக புறக்கணித்ததால் கோவையில் கொரோனா கோரத்தாண்டவமாடுகிறது.
கோவை மக்களை வஞ்சித்து இன்று நீலிக்கண்ணீர் வடிக்க கோவை வரும் தமிழக ஒன்றிய தலைமை அமைச்சரே #GoBackStalin #GoBackStalin #GoBackStalin@CMOTamilnadu @mkstalin
— Sowdha Mani (@SowdhaMani7) May 30, 2021
தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை மாவட்டங்கள் கொரோனா பரவலில் முதன்மை மாவட்டங்களாக உள்ளது. இதில் கோவைக்கு மட்டும் சரியாக தடுப்பூசி வழங்கப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு வலுப்பெற்று வரும் நிலையில் அதன் நிலவரங்களை தற்போது பார்ப்போம்.
மக்கள் தொகை மற்றும் தொற்று பரவல் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசியானது சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்திற்கு தான் அதிகப்படியான வழங்கப்பட்டுள்ளன.
சென்னை – 20 லட்சம்
கோவை – 5.9 லட்சம்
மே 16 முதல் மே 21 வரை கோவையில் தடுப்பூசி செலுத்துதல் எண்ணிக்கை மூன்று இலக்கங்களாகவே இருந்து உள்ளது. அந்த தேதிகளை குறிப்பிட்டு தான் தொடர்ந்து விமர்சமானங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த நாட்களில் சென்னையை தவிர்த்து மதுரை, திருச்சி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, காஞ்சிபுரம் உட்பட தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பெரும்பாலான மாவட்டங்களுக்கும் கிட்டத்தட்ட இதே நிலையே இருந்து உள்ளது. ஆனால் மே 22-23 க்கு மேல் தடுப்பூசி செலுத்துதலின் எண்ணிக்கை சராசரியாக 2 மடங்கு அனைத்து மாவட்டங்களிலும் அதிகரித்து உள்ளது.
மத்திய அரசு தமிழகத்திற்கு இதுவரை ஒதுக்கீடு செய்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரங்களை பார்த்தால் இந்த நிலைமைக்கான பதில்கள் எளிதில் தெரிந்துவிடும்.
மக்கள் தொகை அடிப்படையில் பாஜக அரசு தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்து வருவதாக கூறுகிறது. அதன்படி 6.7 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத் மாநிலத்தில் தற்போது 35 ஆயிரம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக 100 பேரில் 4 பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். 7.5 கோடி மக்கள் உள்ள தமிழகத்தில் தற்போது 3 லட்சத்துக்கும் மேலானோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சராசரியாக 100 பேரில் 15 நபர்கள் பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர். இந்த தரவுகளின் படி பார்த்தால் தமிழகத்திற்கு தான் அதிக தடுப்பூசிகளை பாஜக அரசு ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். மாறாக, மே 1 வரை தமிழகத்திற்கு 68 லட்ச தடுப்பூசிகளும், குஜராத்திற்கு இரண்டு மடங்கு அதிகமாக கிட்டத்தட்ட 1 கோடியே 32 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
நிதர்சன உண்மையான மத்திய அரசின் முறையற்ற தடுப்பூசி விநியோகத்தை மூடி மறைப்பது மட்டுமல்லாமல், தமிழகத்திற்கு தடுப்பூசி வழங்குமாறு கோரிக்கை வைக்காமல், கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் சூர்யா உள்ளிட்டோர் “ஓட்டு போடாத காரணத்தால் கோவையை ஒதுக்குகிறது தமிழக அரசு” ” DontboycottCoimbatore” போன்ற கட்டமைப்புகளை உருவாக்குவது தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் முறையாக கையாளாவிட்டால், ட்விட்டர் போன்ற வலைதளங்களில் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
The central feature of a democracy is to serve all citizens irrespective of who they vote for.
The lack of vaccine supplies for Coimbatore is deeply concerning.
The centre has given vaccines to the state gov.
But it has not reached Coimbatore.
WHY?#DontBoycottCoimbatore https://t.co/svlfAT7Etc
— Vanathi Srinivasan (@VanathiBJP) May 22, 2021
கடந்த இரண்டு நாட்களாக கோவையில் ஒரு தடுப்பூசி கூட போடப்படவில்லை. எப்பொழுது கிடைக்கும் என்றும் தெரியவில்லை. உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. @Subramanian_ma அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu @mkstalin @r_sakkarapani
— Vanathi Srinivasan (@VanathiBJP) May 21, 2021
தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்ட விகிதம் இந்தியாவிலேயே குறைவு. சில ஊடகங்கள் தேவையில்லாத பதற்றத்தை பரப்பி Views அதிகமாக்க பரபரப்பான தலைப்புகளை போட்டு மக்களை முட்டாளாக்கி இன்று கோமியம் என்று ஒளிந்துக் கொள்வது அறமல்ல.
அப்படிப்பட்ட செய்திகளின் தொகுப்பு இங்கே.https://t.co/AhfdUaerf9
— SG Suryah (@SuryahSG) May 27, 2021
18 to 45 வயதுவரை உள்ள முன்னுரிமை அடிப்படையிலான
இளம்வயதினர் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர்.
நேற்று ஒரு ஊசி கூட கோவையில் போடப்படவில்லை.மாநில அரசின் கையிருப்பிலுள்ள 5 லட்சம் தடுப்பூசிகள் உடனடியாக
வழங்கப்படவேண்டும்.@Subramanian_ma@annamalai_k pic.twitter.com/rL77gqGx1V— Vanathi Srinivasan (@VanathiBJP) May 31, 2021
ஆரம்பகட்ட அலட்சியம்
எத்தனை உயிர்களை பறித்துள்ளது.@mkstalin @Subramanian_ma pic.twitter.com/gahRiGr7G6— Vanathi Srinivasan (@VanathiBJP) May 30, 2021
ஒன்றியம் :
“ஒருங்கிணைந்த தமிழக மாவட்டங்களின் ஒன்றிய முதல்வரே” எனும் புதிதாக ஒரு பார்வை பாஜகவின் தமிழக செய்தி தொடர்பாளரால் கடந்த சில நாட்களாக ட்விட்டரில் தொடர்ந்து முன்னிறுத்தப்படுகிறது . மத்திய அரசை ஒன்றிய அரசு என “சரியாக” தற்போது குறிப்பிடப்படுவதின் அடிப்படை புரிதல் இல்லாத ஒரு எதிர்வினைப் பதிவுகள் தான் இவை என்றாலும், அந்த வாக்கியங்கள் தொடர்ந்து பலரால் பகிரப்பட்டு வருகிறது. இவை எல்லாம் பிளவு அரசியல் முனைப்புக்கு துணை போகாது என்றாவிட்டாலும், சாதி மனப்பான்மையை அடிப்படையாக கொண்டு கட்டமைத்து செயல்படுத்தப்படும் இதனை முறையாக கையாண்டு மட்டுப்படுத்த வேண்டிய அவசியம் செய்தி ஊடகங்களுக்கு இருக்கிறது. தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான உடன் தமிழகத்தை மூன்று மண்டலமாக பிரிப்பது தொடர்பாக ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்புடையவர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாகியதும் இதில் அடங்கும்.
தவறான செய்தி :
இப்படி அடிப்படையை சீர்குலைக்கும் நோக்கங்கள் ஒரு பக்கம் இருக்க இந்த ட்விட்டர் ட்ரெண்டிங் போட்டியில் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளுக்கான வரவேற்புகளும் பெரிதாக உள்ளது.
நாட்டின் பிரதமரே இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு முறைக்கூட பார்வையிடாத நிலையில் முதலமைச்சர் ஒருவர் பார்வையிடுவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இதன் அடிப்படையிலேயே WestandwithStalin எனும் எதிர்வினை ஹாஸ்டாக் ட்ரெண்ட் ஆனது.
ஆனால் இதனை “நாட்டிலேயே முதல் முறையாக” , “எந்த ஒரு முதல் அமைச்சரும் இதுவரை செய்யாத” ஒரு விஷயம் நியூஸ் 7 தொலைக்காட்சி உட்பட முன்னணி செய்தி ஊடகமே தவறான செய்திகளை வெளியிடும் போது, ஆய்வுகளுக்கு உட்படுதாமல் இயங்கும் சமூக வலைதளம் அதனை பெரிதாக முன்னிறுத்தியது. மீம் பக்கங்கள் கூட அதைக் குறிப்பிட்டு மீம் பதிவிட்டு வைரலாகிக் கொண்டிருக்கிறது.
ஆனால் உண்மையில் இரண்டு வாரங்களுக்கு முன்பாக மே 11-ம் தேதி கோவா மாநிலத்தின் பனாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கவச உடை அணிந்து நோயாளிகளை பார்வையிட்டார்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஹைதராபாத் நகரில் உள்ள காந்தி மருத்துவமனையின் கொரோனா நோயாளிகளை சந்தித்த புகைப்படத்துடன் கூடிய செய்தி மே 19-ம் தேதி வெளியாகின. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவச உடையும் கொரோனா வார்டிற்கு சென்ற அதே நாளில்(மே30-ம் தேதி) சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் கொரோனா சிகிச்சை மையத்திற்கு வருகை தந்துள்ளார்.
இப்படி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முன்பாக பல முதல்வர்கள் மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறியது, பார்வையிட்ட சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கிறது.
காலியான ட்வீட்கள் :
Dear shangis please dont trend #GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin
— Mahalingam (@Mahalin92555030) May 30, 2021
#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin
— Aravinth (@Aravint50337627) May 30, 2021
#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin#GoBackStalin
— பா.ஜ.க. பரமத்தி ஒன்றியம் (@kparamathibjp) May 30, 2021
திமுக ஆதரவு ட்வீட்கள் :
Super sir @mkstalin Sir🙏🙏 we never let u down. #WeStandWithStalin #WeStandWithCMStalin #westandwithmkstalin @Udhaystalin 💥 pic.twitter.com/L1ln1Nu1lZ
— panda cinema review ✌ (@ajaykumar9498) May 30, 2021
#WeStandWithStalin
In this entire world….The only political leader….The only ChiefMinister….
பூமி பந்தில் முதன்முறையாக ஒரே ஒரு முதலமைச்சர்…
Went to hospital to see(to give confidence) the Covid patients…
Hatsoff cm @mkstalin #WeStandWithStalin#GoBackModi pic.twitter.com/XsmFMbfglP— JAIBALAJI.M (@JAIBALAJIM1) May 30, 2021
GobackStalin மற்றும் WeStandWithStalin கொண்ட ட்வீட்டுகளில் பெரும்பாலும் உள்ளடக்கங்கள் எதுவும் இல்லாமல் வெறும் ஹாஷ்டாக் மட்டுமே முன்னிறுத்தப்படும் பதிவுகளும் ஏராளம் உள்ளன. இது அனைத்து ட்விட்டர் ட்ரெண்ட்களிலும் உள்ள பொதுவான நடைமுறை தான் என்றாலும் ட்விட்டர் கணக்குகளுக்கு இவை முக்கியம் இல்லை. முன்பு கூறியது போல் இங்கு ஹாஷ்டாக் மட்டுமே செய்தி.
Refernce Links :
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715269
https://www.covid19india.org/state/TN
https://dashboard.cowin.gov.in/
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.