போலி மருத்துவர் திருதணிகாசலத்தின் மீது வழக்கு !

சென்னையில் ரத்னா சித்த மருத்துவமனையை இயக்கி வரும் போலி மருத்துவர் திருதணிகாசலம் கொரோனா வைரசிற்கு தன்னிடம் மருந்து உள்ளதாக தொடர்ச்சியாக வெளியிட்ட வீடியோக்கள் மற்றும் பதிவுகளால் சமூக வலைதளங்களில் பிரபலமானார் என அனைவரும் அறிவோம்.

Advertisement

இதற்கு முன்பாக, அவர் போலியான மருத்துவர், அவரை நம்பி உயிரை பணையம் வைக்க வேண்டாம் என யூடர்ன் தரப்பில் தொடர்ந்து கட்டுரை வெளியிட்டு வந்தோம். யூடர்ன் ஆசிரியர் திரு.ஐயன் கார்த்திகேயன் அவர்கள் ஊடகங்களில் கலந்து கொண்ட விவாத நிகழ்ச்சிகளிலும் பேசி இருந்தார்.

மேலும் படிக்க : சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா ?

இந்நிலையில், போலி மருத்துவர் திருதணிகாசலம் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் இன்று (மே 04) செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

” கோவிட்-19 எனும் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ் அப், முகநூல் போன்ற எலக்ட்ரானிக் மீடியாவில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப் பணிகள் இயக்குனர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியின்றி தகவல் பரப்புதல் The Epidemic Diseases Act and Regulation பிரிவு 8-ன் படி தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கண்ட வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக , மைய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ , பதிவோ இல்லாத சென்னை , ஜெய்நகர் , கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சசித்த மருத்துவமனையின் போலி சித்த மருத்துவர் திரு.க.திருதணிகாசலம் என்பவர் கோவிட்-19 எனும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் தவறான செய்தியை பரவவிட்டு, பொது மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருவதால், அவர் மீது உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சட்டரீதியாக தக்க நடவடிக்கை எடுக்க, இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை அவர்களால் சென்னை, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருந்தொற்று காலத்தில் தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என்று அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ” இவ்வாறு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button