தமிழக அரசின் கல்வி டி.வி-யின் சி.இ.ஓவாக சாணக்யா சேனலின் முன்னாள் இணை நிறுவனர் நியமனம் !

கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சியை பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த அதிகாரிகளே நிர்வகித்து வந்தனர். இந்நிலையில், கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலராக (சிஇஓ) மணிகண்ட பூபதி என்பவரை மாநில கல்வி ஆரய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்து உள்ளது.

Advertisement

முதல்முறையாக பள்ளிக்கல்வித் துறையைச் சாராத ஒருவர் கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சிஇஓ-வாக நியமிக்கப்பட்ட மணிகண்ட பூபதி மாதம் ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் 2 ஆண்டிற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், கல்வி தொலைக்காட்சியின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்ட மணிகண்ட பூபதி, இதற்கு முன்பாக திரு.ரங்கராஜ் அவர்கள் நடத்தி வரும் சாணக்யா யூடியூப் சேனலின் இணை நிறுவனராக இருந்து உள்ளார். தினமலரில் 3 ஆண்டுகள் பணியாற்றிய மணிகண்ட பூபதி, பின்னர் தந்தி டிவியில் பணியாற்றி விட்டு திரு.ரங்கராஜ் அவர்களுடன் இணைந்து சாணக்யா யூடியூப் சேனலை உருவாக்கி இருக்கிறார்.

சாணக்யா சேனலின் இணை நிறுவனராக பணியாற்றிய மற்றும் வலதுசாரி ஆதரவாளரான மணிகண்ட பூபதியை பள்ளி மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சியின் சிஇஓ-வாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் சர்ச்சையையும், கண்டனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Links : 

tn govt educational television appoints managing director

https://in.linkedin.com/in/manikandaboopathi

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button