எஃப்.ஐ.ஆரில் கிரெட்டா துன்பெர்க் பெயர் குறிப்பிடவில்லை-டெல்லி போலீஸ் விளக்கம்!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்த ஸ்வீடிஷ் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க் மீது டெல்லி காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உள்ளதாக தமிழ் செய்திகள் மட்டுமின்றி இந்திய அளவில் முன்னணி செய்திகள் பலவற்றிலும் தகவல் வெளியாகியது.

இதையடுத்து, டெல்லி போலீசார் நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டு வந்தது. மேலும், விவசாயிகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன் என கிரெட்டா தெரிவித்த தகவலும் செய்திகளில் வெளியாகியது.

ஆனால், கிரெட்டா துன்பெர்க் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விவசாயிகள் போராட்டத்தை எவ்வாறு ஆதரிப்பது என்பது குறித்த தகவல்களைக் கொண்ட ” டூல்கிட் ” (ஆவணம்) தொடர்பாகவே மட்டுமே டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்து உள்ளது. டூல்கிட் உருவாக்கியர் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், யாரின் பெயரையும் குறிப்பிடவும் இல்லை.

Twitter link| Archive link

எஃப்.ஐ.ஆர் பதிவில் கிரெட்டா துன்பெர்க் பெயர் இருக்கிறதா எனக் கேட்ட போது டெல்லி காவல்துறை சிறப்பு போலீஸ் கமிஷனர் பிரவீர் ரஞ்சன், ” எஃப்.ஐ.ஆரில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை, இது அந்த டூல்கிட்டை உருவாக்கியவர்களுக்கு எதிரானது. டெல்லி காவல்துறை இந்த வழக்கை விசாரிக்கும் ” எனக் கூறியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது.

இதேபோல், இந்தியா டுடே கிரெட்டா துன்பெர்க் மீதான வழக்கு பதிவு குறித்து வெளியிட்ட செய்தியிலும், ” முன்பு வெளியான தகவலில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கிரெட்டா துன்பெர்க்கு தொடர்பு இருப்பதாக வெளியாகியது. இருப்பினும், யார் பெயரையும் குறிப்பிடவில்லை என டெல்லி போலீஸ் பின்னர் விளக்கம் அளித்து உள்ளதாக ” என திருத்தம் எனும் தலைப்பில் இணைத்து உள்ளனர்.

டெல்லி போலீசார் கிரெட்டா துன்பெர்க் ட்வீட் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த காரணத்தினால் அவர் மீது வழக்கு என செய்திகளில் வெளியாகி இருக்கிறது. பின்னர், அதுதொடர்பாக டெல்லி போலீசார் விளக்கம் அளித்த பிறகு செய்திகளில் திருத்தி வருகிறார்கள்.

Links :

Delhi Police files FIR on farmers’ protest ‘toolkit’ tweeted by Greta Thunberg

Delhi Police registers FIR against creators of toolkit shared by Greta Thunberg, teen activist continues to support farm agitation

Please complete the required fields.
Back to top button