ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் ஒன்றிய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது : உச்ச நீதிமன்றம் !

ஜிஎஸ்டி கவுன்சில் உடைய பரிந்துரைகள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விவாகரத்தில் சட்டங்களை இயற்ற நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களுக்கு சமமான அதிகாரம் உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில்தான் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று தன் தீர்ப்பில் தெரிவித்து உள்ளது.
கடல் மார்க்கமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கொண்டு செல்வதற்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி பொருந்தும் என பல இறக்குமதியாளர்களுடன் ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் சண்டையிட்டு வருகிறது.
கடல் சரக்குகள் மீது விதிக்கப்படும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) தொடர்பாக மோஹித் மினரல்ஸ் எனும் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இது அரசியலமைப்புக்கு முரணானது. கடல் சரக்குகள் மீதான ஐஜிஎஸ்டியை ரத்து செய்து வழக்கு தொடர்ந்தோருக்கு சாதகமாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஜிஎஸ்டி கவுன்சில் உச்ச நீதிமன்றத்தை நாடியது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட் தலைமையிலான அமர்விற்கு விசாரனைக்கு வந்த போது, குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதிகள் உறுதி செய்தனர்.
அதுமட்டுமின்றி, இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்ததே. பிரிவு 246ஏ மாநிலத்தையும், ஒன்றியத்தையும் சமமாக நடத்துகிறது. பிரிவு 279 மாநிலமும், ஒன்றியமும் ஒன்றையொன்று சாராமல் தனிச்சையாக செயல்பட முடியாது என்றும் கூறுகிறது.
ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கலாம். ஆனால், இதை செய்ய வேண்டும் என ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை நிர்ப்பந்திக்க முடியாது. ஜிஎஸ்டி விவகாரத்தில் சட்டங்களை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு சமமான அதிகாரம் உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் ஒன்றிய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கும் ” என தீர்ப்பு வழங்கி உள்ளனர்.