மதுவிலக்கு உள்ள குஜராத்தில் போதையில் தள்ளாடிய பாஜகத் தலைவர்.. கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழப்பு !

இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பாஜக கூட்டணிக் கட்சிகளின் சார்பாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இதற்காக நாடு முழுவதிலும் பாஜகவினர் தரப்பில் பல்வேறு கொண்டாட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஜூன் 24-ம் தேதி குஜராத் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் சோட்டா உதேபூர் மாவட்டத்தில் திரெளபதி முர்மு வெற்றியைக் கொண்டாடும் வகையில் பாஜகவினரால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ரஷ்மிகாந்த் வாசவா மதுபோதையில் கலந்து கொண்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

வீடியோவில், நிதானம் இல்லாமல் தள்ளாடியப்படி நடக்கும் ரஷ்மிகாந்த் வாசவாவை ஒருவர் பிடித்து மேடைக்கு அழைத்து செல்வதும், இருக்கையில் அமர்ந்த அவர் தூங்கி வழிவதும், ஊர்வலத்தில் தள்ளாடியப்படி மற்றொருவரை பிடித்துக் கொண்டு நடக்கும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது.

பாஜக தலைவர் ரஷ்மிகாந்த் வாசவாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான பிறகு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.  இதையடுத்து, குஜராத் பாஜக தலைவர் சிஆர் பாட்டீலின் உத்தரவை அடுத்து, ரஷ்மிகாந்த் வாசவா தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து குஜராத் பாஜக மாநில பொதுச்செயலாளர் பார்கவ் பட், ” சர்ச்சையில் இருந்து விலகி இருக்கவே வாசவா ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார். கட்சி அவரது ராஜினாமாவைக் கோரவில்லை. எனினும், அவர் இப்போது மாவட்டத் தலைவர் அல்ல. அவர் ஏதேனும் நோய் காரணமாக இப்படி நடந்து கொண்டாரா அல்லது அவர் மீதானா குற்றசாட்டுகள் உண்மையா என சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்து இருக்கிறார்.

குஜராத்தில் பாஜக மாவட்டத் தலைவர் மதுபோதையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைரலான வீடியோவில் அவர் அருகே பாஜக அமைச்சர் நிமிஷா சுதாகரும் இருந்துள்ளார்.

கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி : 

குஜராத்தில் மது உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவை மாநில அரசால் தடை செய்யப்பட்டு உள்ளதை அறிவோம். அதேநேரத்தில், அங்கு கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்பட்டும், பிடிபட்டும் செய்திகள் பலமுறை வெளியாகி உள்ளன.

இந்நிலையில், குஜராத்தில் கள்ளச்சாராயத்தை குடித்த 18 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், போடாட், பாவ்நகர் மற்றும் அகமதாபாத் மருத்துவமனைகளில் 20-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பலரும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கிராமங்களில் கள்ளச்சாராயம் போலீசார் கைது செய்து உள்ளனர்.

மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் ஆளும் பாஜகவின் மாவட்டத் தலைவரே மதுபோதையில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சம்பவம் சர்ச்சையாகி உள்ள நிலையில், மறுபுறம் அம்மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதிலும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

link : 

BJP district chief from Gujarat’s Chhotaudepur resigns after his video of faltering went viral

droupadi murmu win rashmikant vasava drunk video gujarat bjp

Gujarat Hooch tragedy | Death toll rises to 18, with dozens still critical

 

 

Please complete the required fields.
Back to top button
loader