குஜராத்தில் குப்பை அள்ளும் வண்டியில் வெண்டிலேட்டர்களை எடுத்துச் சென்ற அவலம் !

குஜராத் மாநிலத்தில் ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு தேவையான வெண்டிலேட்டர்களை குப்பை அள்ளும் வண்டியில் எடுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Advertisement
The lallantop எனும் சேனலில் வெளியான வீடியோவே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. குஜராத்தின் ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு வெண்டிலேட்டர்களை சூரத் கார்ப்பரேஷன் உடைய குப்பை அள்ளும் வண்டியில் எடுத்துச் சென்றுள்ளனர்.

 

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குஜராத்தின் சூரத் நகரில் கொரோனாவால் பாதிக்கப்படும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 500 ஆக பதிவாகி உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை படுக்கைகளும் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. அதேபோல், வென்டிலேட்டர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வல்சாத் சிவில் மருத்துவமனையில் இருந்து SMIMER மருத்துவமனைக்கு 20 வெண்டிலேட்டர்களை வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்களை SMIMER மருத்துவமனைக்கு சூரத் கார்ப்பரேஷனின் குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு சென்ற போது பொதுமக்களால் வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான பிறகு, சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளதாக சூரத் கார்ப்பரேஷன் கமிஷனர் பிஎன் பனி மற்றும் வல்சாத் மாவட்ட ஆட்சியர் ஆர்ஆர் ராவல் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்களை முறையாக பேக் செய்யாமல் குப்பை அள்ளும் வாகனத்தில் அனுப்பிய சம்பவம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Links : 

Gujarat corona cases के बीच Surat में Ventilator garbage tractor में लादकर भेज दी गईं

Surat: What does SMC want to prove by bringing a ventilator in the garbage truck? Be a little ashamed

Surat: Ventilators sent to hospital in ‘trash collection vehicle’, probe ordered

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button