H.ராஜா பேசியது என்ன?
பாஜக தேசிய செயலாளர் H. ராஜா சமீபத்தில் உயர்நீதிமன்றத்தையும் காவல் துறையையும் மோசமாக விமர்சித்ததை அடுத்து அவர் நான்கு வாரத்திற்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் உயர்நீதிமன்ற உத்தரவால் போலீசாரால் தடுக்கப்பட்ட போது அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக 2:45 நிமிட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. அதில் “வெக்கமா இல்ல உங்களுக்கு யூனிபார்ம் போட, whole police is corrupt , போலீஸோட ஈரல் நூறு சதவீதம் அழுகி போச்சு சரி நான் ஒரு ஒரு இந்து வீடு வழியாக போவேன் முடிஞ்ச தடுத்து பாரு… High court ஆவது மயிராவது… ஹிந்து விரோதி நீங்க… பாதிரியார் லஞ்சம் கொடுத்தா என் கிட்ட கேளுங்க நான் தரேன் லஞ்சம்… High court ஆவது மண்ணாங்கட்டியாவது… ” என ஆவேசமாக பேசி இருந்தார்.
இதை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. எச். ராஜா அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது எனக்கூறினார். மறுபடியும் 6 நிமிடத்திற்கு மேலே மற்றொரு கோணத்தில் உள்ள வீடியோ வெளியாகி இருக்கிறது அந்த வீடியோ கீழே :