ஓரினச்சேர்க்கை பெற்றோர் குறித்து தமிழக பள்ளிப் பாடத்தில் இடம்பெற்றதாக வதந்தி!

சட்டப்பூர்வமான வயதை எட்டியவர்களில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்து வாழும் ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்று 2018-ம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.
இந்நிலையில், தமிழக பள்ளிப் பாடப்புத்தகத்தில் குடும்பம் குறித்த பிரிவில் ஆண்-ஆண்-குழந்தை, பெண்-பெண்-குழந்தை என ஓரினச்சேர்க்கையாளர்களின் குடும்பம் குறித்து பாடம் இடம்பெற்று இருப்பதாக ஆங்கிலத்தில் இருக்கும் பாடப்புத்தக பக்கத்தின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு வைரல் செய்து வருகிறார்கள்.
The concept of a family in a TN book. Bravo. pic.twitter.com/cIYtgFBAlQ
— Nitish Saxena (@nitishsaxena_) January 3, 2020
ஓரினச்சேர்க்கை குறித்த புரிதலை உருவாக்கி வருவதாக பாராட்டு தெரிவித்தும், சிலர் ஓரினச்சேர்க்கையை ஊக்கப்படுத்தும் விதத்தில் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தும் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்கள். ஆனால், வைரல் செய்யப்படும் பாடப்புத்தகம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல, அது எகிப்து நாட்டின் பள்ளிப் பாடப்புத்தகம்.
2017-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி egyptindependent எனும் இணையதள செய்தியில், ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் வகையில் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற கார்ட்டூன் தொடர்பாக விசாரணையை கல்வித்துறை அமைச்சகம் தொடங்கியதாக வெளியாகி இருக்கிறது.
2017-ல் எகிப்து நாட்டின் பள்ளிப் பாடப்புத்தகத்தில் ஓரினச்சேர்க்கை பெற்றோர் குறித்த கார்ட்டூன் பக்கத்தை தமிழக பள்ளிப்பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஒன்று எனத் தவறாக பரப்பி வருகிறார்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.