வீட்டு பணியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் எண்ணற்ற சலுகை.. பயனாளர்களோ வெறும் 3% !

ந்தியா முழுவதும்  தோராயமாக 43 கோடியே 70 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர் என ஒன்றிய தொழிலாளர் நலத்துறை நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரியப்படுகிறது.

Advertisement

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் கீழ் வரும் வீட்டு பணியாளர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்த பேச்சுக்கள், தற்பொழுது பொது சமூக தளத்தில் பேசு பொருளை ஏற்படுத்தி உள்ளது.

2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, நான்கில் ஒரு வீட்டுப் பணியாளர் தீண்டாமைக்கு உள்ளாக்கப்படுகிறார் எனவும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு முதல் அனைத்திலும் சாதிய வர்க்க பாடுபாடு இருப்பதாகவும் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. வீட்டுப் பணியாளர்களின் சுயமரியாதையை அரசு உறுதி செய்ய சட்டங்கள் இயற்றுவது இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமாக அமைகிறது.

வீட்டு பணியாளர்கள் வாழ்வியல் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டு வீட்டுப் பணியாளர்களுக்கு என ஊதிய நிர்ணய சட்டம் வழங்கியுள்ளது. அச்சட்டத்தின் படி மாநகராட்சி பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது 39 ரூபாயும், நகராட்சி பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது 37 ரூபாய் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். வீட்டுப் பணி செய்பவர்கள் 8 மணி நேரம் பணியாற்றுவதற்கு முறையே நகராட்சி பகுதிகளுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 6836, மாநகராட்சி பகுதிகளுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 8060 தர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணியாளர்கள் வீட்டிலேயே தங்கி வேலை பார்ப்பதற்கு கூடுதலாக பத்து சதவீதம் ஊதியம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. வீட்டு பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்காத உரிமையாளர்களுக்கு சிறை தண்டனை வழங்கவும் இச்சட்டம் வழி வகுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வீட்டு பணியாளர்களுக்கு நலவாரியம் அமைத்து அவர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் பல பயனுள்ள திட்டங்களை அரசு வகுத்துள்ளது, அவற்றில் பணியாளர்களின் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, திருமணம் உதவித்தொகை மகப்பேறு உதவித்தொகை, மருத்துவ காப்பீடு உதவித்தொகை, ஈம சடங்களுக்காண உதவி தொகை ஆகிய அம்சங்கள் குறிப்பிடத்தக்கவை.

Advertisement

தமிழ்நாட்டு வீட்டு பணியாளர்கள் நல வாரியம் உதவித்தொகை பெறுவது எப்படி ?

வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இணைவதற்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தகுதிகள் / ஆவணங்கள் :

  • பணியாளர்கள் 18 வயது முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • பணியாளர்கள் விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட தொழிலில் பணியாற்றுகிறேன் என்பதற்கான சான்று வேலையளிப்பவரால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
  • பணியாளர் வேலை குறித்து பணி சான்றிதழை தொழிற்சங்கம் வழங்கியிருந்தால் தொழிற்சங்கத்தின் பதிவு எண் மற்றும் முகவரியுடன் கூடிய முத்திரை இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • வயது மற்றும் இருப்பிடம் குறித்த சான்றிதழ்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  • வங்கி கணக்கு புத்தக நகல் (தேசியமயமாக்கபட்ட) மற்றும் ஆதார் அட்டை நகல்  சமர்ப்பிக்க வேண்டும்.

உதவி தொகைகள்:

பதிவு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு அரசு,  குடும்பத்தில்‌ ஆண்கள் அல்லது பெண்களுக்கு திருமணம் நடந்தால் ஆண்களுக்கு 3000 ரூபாயும் பெண்களுக்கு 5000 ரூபாயும் திருமண உதவித் தொகையாக வழங்குகிறது. பதிவு செய்யப்பட்ட பெண் பணியாளர்களின் மகப்பேறு மற்றும் கரு சிதைவுக்கான உதவித்தொகையும் அரசு நிர்ணயித்து, மகப்பேருக்கு 6000 ரூபாயும், கருக்கலைப்பு அல்லது கரு சிதைவடைந்தால் ரூபாய் 3000 வழங்கி வருகிறது.

பணியாளர் குழந்தைகளின் கல்வி உதவித் தொகையாக ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் அரசு நிதியை ஒதுக்கி உள்ளது. பணியாளர்களின் குழந்தைகள் பத்தாவது தேர்ச்சி பெற்றிருந்தால் ரூபாய் ஆயிரமும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் ரூபாய் 1500 வழங்கி வருகிறது. பணியாளர்களின் பெண் குழந்தைகள் பட்டப் படிப்பு பயின்றால் ஆண்டுக்கு ரூபாய் 1500, விடுதியில் தங்கி படித்தால் ரூபாய் 1750, பட்ட மேல் படிப்பிற்கு ரூபாய் 4000, விடுதியில் தங்கி படித்தால் ரூபாய் 5000 வழங்குகிறது.

நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளி 60 வயதை கடந்தால் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் பணியாளர்கள் ஓய்வூதிய தொகையாக வழங்கப்படுகிறது. பணியாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் காப்பீட்டு தொகையாக ரூபாய் ஒரு லட்சமும், இயற்கை மரணம் எய்தினால் ரூபாய் 20,000, ஈம சடங்கு நிதியாக ரூபாய் ஐந்தாயிரமும் அரசு வழங்குகிறது.

links : 

tamil-nadu-s-safety-net-for-workers-paying-your-maid-less-will-land-you-in-jail

https://www.bbc.com/tamil/india-60924313

between-the-bathroom-and-the-kitchen-there-is-caste

Labour_Welfare_Scheme_Booklet (2)

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button