This article is from Apr 18, 2019

எப்படி ஓட்டுப்போடுவது?

உள்ளே நுழைந்ததும் உங்கள் வாக்காளர் லிஸ்டில் உங்கள் பெயர் சரிபார்க்கப்படும் , உங்கள் அடையாள அட்டையுடன் சேர்த்து.

அடுத்து உங்கள் கையில் மை வைப்பார்கள்

பிறகு 17a formஇல் கையொப்பம் இட வேண்டும்.

உங்கள் கையொப்பம் இட்ட சீட்டை பெற்றுக்கொண்டு , மை வைத்த விரலையும் சரி பார்த்த பின் அலுவலர் உங்களை வாக்கு செலுத்த அனுமதிப்பார்.

Ballot box இல் உங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கு ஓட்டளித்த பின் அதன் நேரே உள்ள விளக்கு எரியும் அத்துடன் பீப் ஒலி கேட்கும்.

பின் vvpat மெசினில் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்கள் பெயர் சின்னம் காட்டும் . 7secஇல் அது சீல் வைக்கப்பட்ட பெட்டியில் விழும் அதற்கு முன் பார்த்துக் கொள்ளலாம்.

ஓட்டு போட என்ன எடுத்துச் சொல்ல வேண்டும்
1. அடையாள அட்டை
2. பேனா (அங்கேயே இருக்கும் எனினும் )

மொபையில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை!

அடையாள அட்டை எது எல்லாம் எடுத்துச் சொல்லலாம்

1. வாக்காளர் அடையாள அட்டை
2. ஓட்டுனர் அடையாள அட்டை
3. பாஸ்போர்ட்
4.பான் கார்ட்
5. வங்கி கணக்குப்புத்தகம் (புகைப்படத்துடன் )
6.ஆதார் அட்டை
7. பென்சன் டாக்குமண்ட் (புகைப்படத்துடன்)
8. அரசாங்க பணியாளர் அட்டை (மாநில, மத்திய)
9. Mla , Mp அடையாள அட்டை
10. ஹெல்த் இன்சூரன்ஸ் சுமார்ட் அட்டை

Please complete the required fields.




Back to top button
loader