This article is from Dec 10, 2021

மனித உரிமை மீறல் வழக்குகளில் 3 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசம் முதலிடம் !

இந்தியாவில் மனித உரிமை மீறல் தொடர்பாக பதியப்படும் வழக்குகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறதா என திமுக எம்.பி சண்முகம் ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு டிசம்பர் 8-ம் தேதி உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தேசிய மனித உரிமை ஆணையம்(என்.எச்.ஆர்.சி) ஆல் கிடைத்த தரவுகளின்படி மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கவில்லை ” எனத் தெரிவித்து இருந்தார். மேலும், இந்தியாவில் மாநில வாரியாக பதிவான மனித உரிமை மீறல் வழக்குகளின் தரவுகள் அளிக்கப்பட்டு இருக்கிறது.

அமைச்சர் நித்யானந்த் ராய் பகிர்ந்த தரவுகளின்படி, தேசிய மனித உரிமை ஆணையம் 2021-2022ம் ஆண்டிற்கு அக்டோபர் 31-ம் தேதி வரை 64,170 மனித உரிமை மீறல் வழக்குகளை பதிவு செய்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 2018-19-ல் 89,584, 2019-20-ல் 76,628 மற்றும் 2020-21ல் 74,968 பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை இடம்பெற்றுள்ளது.

இந்திய அளவில் கடந்த 3 ஆண்டுகளில் மற்றும் இந்த அக்டோபர் 31 வரையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் ஆண்டுதோறும் பதிவு செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளில் 40% வழக்குகள் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தது என உள்துறை அமைச்சகம் அளித்த தரவுகள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2018-19-ல் 41,947 வழக்குகளும், 2019-20-ல் 32,693 வழக்குகளும், 2020-21ல் 30,164 மற்றும் 2021-22ல் அக்டோபர் வரையில் மட்டும் 24,242 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

டெல்லியில் 2018-19-ம் ஆண்டில் 6,562, 2019-20-ம் ஆண்டில் 5,842, 2020-21ல் 6,067 மற்றும் 2021-22ல் அக்டோபர் வரையில் 4,972 வழக்குகளும் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் 2018-19-ம் ஆண்டில் 3194, 2019-20-ம் ஆண்டில் 6535, 2020-21ல் 4504 மற்றும் 2021-22ல் அக்டோபர் வரையில் 1879 வழக்குகளும் பதிவாகி இருக்கிறது.

Link : 

MINISTRY OF HOME AFFAIRS

Please complete the required fields.




Back to top button
loader