மிருகங்களை பலாத்காரம் செய்யும் மனிதன்.

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்புணர்வு கொடுமைகளைப் பற்றி நாள்தோறும் கேள்விப்பட்டு வருகிறோம். அதே உலகில் தான் மனிதர்களால் விலங்குகளுக்கும் பாலியல் கொடுமைகள் இழைக்கப்படுகிறது என்பதை பெரும்பாலானோர் அறிவதில்லை.
இந்தோனேசியா நாட்டில் உராங்குட்டான் குரங்கை பாலியல் தொழிலில் அடிமையாக வைத்திருந்த அதிர்ச்சி செய்தியை பலரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவின் மத்திய கலிமன்டான் பகுதியில் karen pangi அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உராங்குட்டான் குரங்கை பாலியல் தொழிலில் அடிமையாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
போனி என அழைக்கப்படும் அந்த உராங்குட்டானின் உடலில் உள்ள முடிகளை தினமும் அகற்றி, ஒப்பனைகள் செய்து, வாசனை திரவியங்கள் அடித்து, நகைகள் அணிவித்து சுவரில் சங்கிலிகள் கொண்டு கட்டி வைத்திருப்பார்கள். அங்கு வரும் ஆண்கள் பணம் செலுத்தி விட்டு உராங்குட்டான் குரங்கை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இத்தொழிலை செய்து வந்தவர்களுக்கு போனி மூலம் அதிக லாபம் கிடைத்து வந்துள்ளது.
விபச்சாரம் அதிகம் நிகழும் அக்கிராமத்தில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக போனி உராங்குட்டான் பாலியல் அடிமையாக இருந்து வந்துள்ளது என கூறப்படுகிறது. இருப்பினும், எத்தனை ஆண்டுகள் அங்கு அடிமையாக இருந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. தினமும் முடிகளை நீக்கி, அலங்காரப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு வந்ததால் போனி கடுமையாக பாதிக்கபட்டு இருந்தது.
அந்த கிராமத்தில் போனியால் அதிகம் வருமானம் வந்து கொண்டு இருந்ததால் அதைப் பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுக்க உள்ளூர் மக்கள் தயங்கி வந்துள்ளனர். இருப்பினும், 2003 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆயுதம் ஏந்திய 35 போலீசாரால் போனி உராங்குட்டான் மீட்கப்பட்டது.
பல ஆண்டுகளாக பாலியல் அடிமையாக சிக்கி இருந்ததால் காடுகளில் வாழ்வது அதற்கு அசாத்தியமாக மாறியது. உணவு தேடுதல் உள்ளிட்டவை இயலாத காரியமாகவே மாறிவிட்டது. அதன்பின் போனிக்கு இயற்கையாக வாழ்வது குறித்த பல பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 15 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல உடல் நிலையுடன் போனி உராங்குட்டான் Nyru menteng rehabilitation centre-ல் 7 உராங்குட்டான் உடன் வாழ்ந்து வருகிறது.
இந்தியாவில் நிகழ்ந்தவை :
டெல்லியில் 2017 ஆகஸ்ட் 25-ம் தேதி தனியாருக்கு சொந்தமான கார் ஓட்டுனரான நரேஷ் குடித்து விட்டு தெருவில் சுற்றி வந்த ஜென்னி என்ற பப்பி நாய்க் குட்டியை பாலியல் வன்புணர்வு செய்து உள்ளார். பின்னர் விலங்கு ஆர்வலர்கள் மற்றும் தெருவாசிகள் பற்றி பயந்து நாய்க் குட்டியை பையில் வைத்து அருகில் உள்ள பகுதியில் வீசியுள்ளார்.
நாய்க் குட்டியின் இறந்த உடலை சோதித்த மருத்துவர்கள், பாலியல் வன்புணர்வு செய்ததால் இரத்தம் அதிகமாக வெளியேறி இறந்ததாகக் கூறியுள்ளனர். இது தொடர்பாக குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மும்பையில் மால்வாணி பகுதியில் ஆண் நாய் ஒன்றை நான்கு பேர் சேர்ந்து கொடூரமாக கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து உள்ளனர். மூன்று நாட்கள் தொடர் சிகிச்சையில் அதிக வலியுடன் இருந்து இறந்துள்ளது. இது நடந்தது நவம்பர் 2018-ல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நாய், ஆடு உள்ளிட்ட பல விலங்குகள் பாலியல் வன்புணர்வுக்கு மனித மிருகங்களால் உட்படுத்தப்பட்டு இறந்தும் உள்ளன. போனி உராங்குட்டான் போன்று மிக கொடூரமான நிகழ்வுகள் மிகவும் அரிதானவை. விலங்குகளை பாலியல் அடிமையாக்கி சித்தரவதை செய்வது அதிகளவில் ஆண்களும், சில பெண்களும் கூட எனலாம்.
செக்ஸ் திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்தி மனதில் கொடூரத்தை விதைக்கின்றனர். விலங்குகளை விட உயர்ந்தவர்கள் எனக் கூறிக் கொள்ளும் சில மனித மிருகங்கள் விலங்குகளை அடிமைப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்கின்றனர் என்பதை நாம் அறியாமலேயே இருந்து உள்ளோம்.
“ இது வெறும் செய்தி அல்ல மனிதன் என்ற திமிர் கொண்டு மற்ற ஜீவராசிகளை ஒடுக்கும் வெறிச்செயல் “
‘Prostitute’ orangutan: Dem shave her hair, wear her makeup come force her to dey sex men
Horrible: 34-year-old man accused of raping female puppy to death in Delhi
Mumbai: Gang-raped dog dies after three painful days of treatment
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.