40,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால ஓநாயின் தலை !

புவி வெப்பமயமாதலால் பனிப் பிரதேசங்கள் உருகிக் கொண்டிருப்பது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதிகரிக்கும் வெப்பத்தினால் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் பனிப் பாறைகள் பெருமளவில் உருவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ரஷ்யாவின் சைபீரியப் பகுதியான யக்கூடியாவில் உருகிய பனிப் பகுதியில் பழங்கால மாமூத் யானைகளின் தந்தங்கள் மற்றும் காண்டாமிருகம் குறித்த தேடுதலில் 40,000 ஆண்டுகள் பழமையான ஓநாய் ஒன்றின் தலை ரஷ்யன் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்துள்ளது.
இத்தகைய, கற்கால ஓநாயானது தற்போது இருக்கும் ஓநாயை விட 25% பெரியது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன. எனினும், அது ஆணா அல்லது பெணா என தெரியவிக்கவில்லை. முன்பு ஒருமுறை ஆராய்ச்சியாளர்களுக்கு ஓநாயின் மண்டையோடு மட்டுமே கிடைத்து இருந்தது.
ஆனால், இந்த ஓநாய் தலையில் காது, பற்கள், மூளை என அனைத்தும் உள்ளது. ஓநாயின் தலையானது 40,000 ஆண்டுகள் உறைப் பனியில் இருந்ததால் அழுகிப் போகாமல் இருந்துள்ளது. இத்தனை ஆண்டுகள் கழித்து உறுப்புகள் கெடாமல் கிடைக்கும் உயிரினத்தில் இது அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன. இதனுடன், சிங்க இனத்தைச் சேர்ந்த குட்டி மற்றும் மானின் உடலும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பனிப் பகுதியில் இருந்து கிடைத்த ஓநாயின் தலையானது யக்கூடியா அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாமூத் ஆராய்ச்சி பிரிவிடம் ஒப்படைத்து உள்ளனர். மேலும், கற்காலத்தில் வாழ்ந்த ஓநாயின் மூளை, மண்டையோடு எப்படி உள்ளது என்ற டிஜிட்டல் மாடலை தயாரித்து வருகின்றனர். ஓநாயின் தலை எப்படி துண்டிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அதற்கான பதிலை ஆராய்ச்சியாளர்கள் தேடி வருகின்றனர்.
சைபீரியாவில் நிறைத்து இருக்கும் பனிப் பகுதியின் வூட்ல்லி மாமூத் திசுக்களில் இருந்து ஒருநாள் க்ளோனிங் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை யக்கூடியா மற்றும் ஜப்பான் அறிவியலாளர்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். எனினும், அத்தகைய திட்டங்கள் நடைமுறையில் இருக்கும் தொழில்நுட்பத்தில் சாத்தியமில்லை என்கின்றனர்.
மேலும் படிக்க : 110 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் மம்மி !
ஏதுவாயினும், பனிப் பகுதிகள் உருக உருக கற்கால விலங்குகளின் உடல் மிச்சங்கள் வெளிவரக்கூடும். அவற்றின் காலம் மற்றும் வாழ்வியல் குறித்தும் ஆராய்ச்சியாளர்களால் தெளிவாக தெரிவிக்க முடியும்.
Proof :
Perfectly preserved head of Ice Age wolf found in Siberia
40,000-year-old Ice Age wolf head found in Siberia
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.