இந்தியா சீனா பதற்றம் : 43 சீன வீரர்கள் பலியா ?

சீன ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைவதால் இருநாட்டு துருப்புகளுக்கும் இடையே மோதல்கள் உண்டாகின. இந்தியா மற்றும் சீன துருப்புகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாகவும், சீனாவின் தரப்பில் 43 பேர் உயிரிழந்ததாகவும் ட்விட்டர், முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாய் பரவி வருகிறது.
இந்திய சீன எல்லையில் நடந்த மோதலில் 43 சீன ராணுவ வீரர்கள் பலி! – https://t.co/6zl8Dybz7T
— Inneram.com (@inneram) June 16, 2020
இந்தியாவின் கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு, பாங்காக் ஏரி, தவுலத் பெக் ஓல்டி உள்ளிட்ட எல்லைப் பகுதியில் கடந்த சில வாரங்களாவே இந்தியா மற்றும் சீன ராணுவ துருப்புகளுக்கு இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. முதலில் இந்திய தரப்பில் 3 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. பின்னர் மோதல் முற்றியதில் இதுவரை இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததாக பி.டி.ஐ தகவல் வெளியிட்டு உள்ளது.
Indian Army says a total of 20 Indian soldiers have died in Ladakh’s Galwan Valley
— Press Trust of India (@PTI_News) June 16, 2020
ஏஎன்ஐ செய்தி முகமை, கால்வான் பள்ளத்தாக்கில் நேருக்கு நேர் சந்தித்ததில் சீன தரப்பில் இறந்தவர்கள் மற்றும் பலத்த காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 43 என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. செய்தி ஊடகங்கள் ஏஎன்ஐ செய்தி முகமையை மேற்கொள்காட்டியே செய்தி வெளியிட்டு வருகின்றனர்
Indian intercepts reveal that Chinese side suffered 43 casualties including dead and seriously injured in face-off in the Galwan valley: Sources confirm to ANI pic.twitter.com/xgUVYSpTzs
— ANI (@ANI) June 16, 2020
சீன தரப்பில் காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையே 43 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய தரப்பில் அளிக்கப்பட்ட தகவலே. ஆனால், இந்திய அளவில் பல செய்தி தளங்கள் சீன தரப்பில் 43 பேர் பலி மற்றும் காயம் என செய்தி வெளியிட்டு உள்ளனர். இதனால் குழப்பம் ஏற்பட்டு சமூக வலைதளங்களில் அதையே பகிர்ந்து வருகிறார்கள். இரு நாட்டு வீரர்களின் உயிரிழப்பை ஒப்பிட்டு வெளியாகும் பதிவுகளை காண முடிகிறது.
Chinese side didn’t release number of PLA casualties in clash with Indian soldiers. My understanding is the Chinese side doesn’t want people of the two countries to compare the casualties number so to avoid stoking public mood. This is goodwill from Beijing.
— Hu Xijin 胡锡进 (@HuXijin_GT) June 16, 2020
சீன தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சீன அரசு தரப்பில் வெளியாகவில்லை. இதை சீனாவை மையமாக் கொண்டு செயல்படும் குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் எடிட்டர் தன் ட்விட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்து உள்ளார்.
35 dead and injured on Chinese side during clash in Galwan Valley: official sources quoting US intelligence reports
— Press Trust of India (@PTI_News) June 17, 2020
” கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் சீனத் தரப்பில் 35 பேர் இறப்பு மற்றும் காயம் என அமெரிக்க உளவுத்துறை அறிக்கை தெரிவித்து உள்ளதாக ” பி.டி.ஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.
இந்தியா-சீனா தரப்பில் ஏற்பட்ட மோதலால் இரு தரப்பினருக்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. சீனாவின் அத்துமீறல் இரு நாடுகளிடையே போர் சூழலை உருவாக்குமோ என்ற அச்சத்தை எழுப்பி உள்ளது. இதற்கிடையில், எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத போதே சமூக வலைதளங்களில் பலி எணிக்கை, போரை ஊக்குவிக்கும் வகையில் தவறான பதிவுகளும், தேவையற்ற பதிவுகளும் வெளியாகி வருகின்றன.
கொரோனா, பொருளாதாரப் பாதிப்பு என நாடு இருக்கும் சூழலில் இந்தியாவிற்கு சீனாவின் மூலம் மற்றொரு இக்கட்டான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதில் இருந்து இந்திய வீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் மீள வேண்டும் என்ற எண்ணமே அனைவரிடத்திலும் இருக்க வேண்டியது அவசியம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.