இந்தியாவில் கொரோனா அதிகரிக்கும் போது தளர்வுகள்.. பிற நாடுகளுடன் ஒப்பிடப்பட்ட வரைபடம் !

உலக அளவில் கோவிட்-19 நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலை காணப்பட்டாலும் பல நாடுகளில் தொற்று பரவும் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் முன்பே பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டாலும் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தொற்று பாதிப்பால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு பின்னர் தளர்வுகள் செய்யும் போது உள்ள எண்ணிக்கையையும், இந்தியாவின் எண்ணிக்கையையும் ஒப்பிடப்பட்ட இந்த வரைபடம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வரைபடத்தை வெளியிட்டது யார் எனத் தேடிய பொழுது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் முகநூல் பக்கத்தில் இந்தியாவில் பொதுமுடக்கம் தோல்வியில் முடிந்துள்ளதாக இந்த வரைபடத்தை வெளியிட்டு உள்ளார். வரைபடத்தில் source என ourworldindata, oxford university என இடம்பெற்றுள்ளது.
ourworldindata இணையதளத்தில் 2019 டிசம்பர் 31-ம் தேதி முதல் ஜூன் 5-ம் தேதி வரை ஒவ்வொரு நாடுகளிலும் நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. அதில், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, இந்தியா ஆகிய 5 நாடுகளின் கிராஃப் மட்டும் தேர்ந்தெடுத்து உங்களுக்கு காண்பித்து உள்ளோம்.
இதேபோல், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளுக்கு Worldo meter இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட வரைபடத்தினை கீழே காணலாம்.
ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றால் மார்ச் 14-ம் தேதி அவசரநிலை அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 28-ம் தேதி முதல் 4 கட்டங்களாக பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகளை கொண்டு வருவதாக அறிவித்தனர். இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் மார்ச் 23-ம் தேதி பொதுமுடக்கத்தை அறிவித்தார். மே 10-ம் தேதி கோவிட்-19 பொதுமுடக்கத்தின் விதிகளில் தளர்வுகளைக் கொண்டு வருவதாக வெளியாகி உள்ளது.
மார்ச் 20-ம் தேதி செய்தியில் ஜெர்மனியில் முதலாவதாக பவேரியா மாநிலத்தில் 2 வாரங்களுக்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதாக வெளியாகி இருக்கிறது. ஜெர்மனியில் பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மே முதல் வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து பின்னர் குறைந்து வருகிறது.
ஒரு கட்டத்தில் அதிக அளவில் கொரோனா நோயாளிகளையும், இறந்தவர்களையும் கொண்ட நாடாக இத்தாலி இருந்தது. மே 4-ம் தேதி மக்கள் குறைந்த அளவில் உறவினர் வீடுகளுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. தளர்வுகள் கொண்டு வரப்பட்ட பின்னர் இத்தாலியில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து பின்னர் குறைந்துள்ளது.
இந்தியாவில் மார்க் 22-ம் தேதி ஒருநாள் பொதுமுடக்கத்திற்கு பிறகு மார்ச் 24-ம் தேதி முதல் கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. மே மாத இறுதியில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஜூன் மாதத்தில் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை போன்ற பெரு நகரங்களில் கூட தளர்வுகள் இருப்பதால் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பிறகு ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இந்தியாவில் பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகளை அறிவிக்க நாட்டின் பொருளாதாரமும் காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது.
ஒரு நேரத்தில் கொரோனாவால் புதிய நோயாளிகளை அதிகம் கொண்ட இத்தாலியில் தற்போது புதிய பாதிப்புகள் குறைந்துள்ளன. தற்போது இந்தியா இத்தாலியை முந்தி உள்ளது. எனினும், இறப்பு விகிதத்தில் பிற நாடுகளை ஒப்பிடும் பொழுது இந்தியாவில் குறைவே. இத்தாலியின் நிலையைக் கண்டு ஏற்பட்ட அச்சம் தற்போது இந்தியாவில் இருக்கும் பாதிப்பை கண்டு ஏற்படவில்லை என்பதே எதார்த்தம்.
Proof links :
https://www.worldometers.info/coronavirus/
Coronavirus: Italy’s PM outlines lockdown easing measures
Coronavirus: Germany introduces first lockdown as Bavaria imposes two-week ban on going outside
Global report: Covid-19 lockdown rules relax in European nations amid confusion in UK
Confusion in Italy as it enters ‘Phase Two’ lockdown
Lifting of lockdown in Spain – full details of all phases for all regions
Coronavirus: How long has Spain been on lockdown and when does it end?
https://www.wired.co.uk/article/uk-lockdown