This article is from Mar 15, 2019

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அரசு பொது நிறுவனங்கள் !

இந்திய ஒன்றியத்தின் அரசுசார் பொது நிறுவனங்களின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பதை மக்கள் ஓரளவிற்கு அறிந்து இருப்பர். எந்த ஆட்சி வந்தாலும் அரசு பொது நிறுவனங்களின் நிலை மோசமாக செல்வதை பார்க்க முடிகிறது.

HAL, BSNL , Air India, TIFR , Statue of unity , Air force and Navy உள்பட அனைத்திலும் நிதி நெருக்கடி நிலை உருவாகி அதில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பிரச்சனை எழுகிறது.

HAL :  

HAL என சுருக்கமாக அழைக்கப்படும் Hindustan Aeronautical Limited  சமீபத்தில் தன் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க 1000 கோடி கடன் வாங்க தீர்மானித்து உள்ளனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது HAL-லில் இவ்வாறு நடந்து உள்ளது.

HAL நிறுவனம் ராணுவத்திற்கு தேவையான விமானங்களை உருவாக்க, பராமரிக்க மற்றும் பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ளும். கடந்த ஆண்டின் இறுதியில், வாடிக்கையாளர்களிடம் இருந்து HAL-க்கு வர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.15,700 கோடி. இதில் மிகப்பெரிய அளவில் நிலுவை வைத்து இருப்பது இந்திய விமானப்படை IAF ஆகும். இந்திய விமானப்படை 14,500 கோடி நிலுவைத் தொகை வைத்து உள்ளது. இது தவிர இந்திய ராணுவம், கப்பற்படை மற்றும் கடலோர காவல் படையிடம் இருந்தும் மீதமுள்ள தொகை வர வேண்டி உள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.

கை இருப்புத் தொகை குறைவாக இருப்பதால், மார்ச் 31 வரையிலான மூன்று மாதங்களுக்கு ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்கத் தேவையான ரூ.1000 கோடியை ஓவர் ஃடிராப்ட் ஆக கேட்டுள்ளனர். HAL-க்கு பாதுகாப்புத்துறை அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஏற்கனவே இருந்த HAL நிறுவனத்திற்கு பதிலாக தான் அனில் அம்பானியின் நிறுவனம் இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.என்.எல் : 

இந்தியாவின் தகவல்  தொலைத்தொடர்பு பொது நிறுவனமான பி.எஸ்.என்.எல் சேவை இன்னும் சில ஆண்டுகளில் முடிவுக்கே வந்து விடும் என மக்களே கிண்டல் செய்து கொண்டு இருக்கின்றனர். இதற்கிடையில், அங்குள்ள தொழிலாளர்களுக்கே ஊதியம் வழங்கவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.

18 ஆண்டுகளில் முதல் முறையாக கேரளா, ஜம்மு காஷ்மீர், ஓடிசா மற்றும் கார்ப்பரேட் அலுவலகம் உள்பட  பிப்ரவரி மாத ஊதியத்தை பி.எஸ்.என்.எல் முழுநேர ஊழியர்கள் பெறவில்லை. இவர்கள் ஒருபுறம் இருந்தால், மறுபுறம் ஒப்பந்த ஊழியர்களின் நிலை மிகவும் மோசம். கடந்த மூன்று மாதங்களாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை.

இதையடுத்து, ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க அரசு நிதியுதவியை உடனடியாக அளிக்க வேண்டும் என தொழிலாளர்கள் சங்கம் டெலிகாம் அமைச்சர் மனோஜ் சின்கா-விற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஏர் இந்தியா : 

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தன்னிடம் பணியாற்றும் 20,000 ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியத்தை வழங்க தவறி விட்டதாக கூறப்படுகிறது. ஒன்று அல்ல இரண்டு அல்ல 2018 ஆம் ஆண்டில் பல மாதங்களில் இது போன்று நடந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

” 2018 டிசம்பர் மாதன் ஊதியத்தைக் கூட ஜனவரி 7-ம் தேதி வரை ஏர் இந்தியா வழங்கவில்லை ” என செய்திகளில் வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகளாக ஏர் இந்தியா விமானம் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இருப்பினும், 2018-ல் ஏர் இந்தியாவின் நிகர இழப்பு ரூ.5,337  கோடியாக சரிந்து உள்ளது. முந்தைய நிதியாண்டில் 2017-18-ல் இது ரூ.6,281 கோடியாக அதிகரித்து இருந்தது.

TIFR : 

Tata Institute of Fundamental Research  எனும் மும்பையை மையமாகக் கொண்டு  இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனத்தில் அறிவியல், உயிரியல் சார்ந்த பல்வேறு அடிப்படை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மார்ச் 6, 2019 -ல் Tata Institute of Fundamental Research வெளியிட்ட அறிவிப்பில் போதுமான நிதி இல்லாதக் காரணத்தினால் பிப்ரவரி மாத ஊதியத்தில் 50% சதவீதம் மட்டும் ஊழியர்களுக்கு அளிப்பதாகவும், மீதமுள்ளத் தொகை நிதிப் பிரச்சனை சரியான பிறகு வழங்கப்படும் என கடிதத்தின் வாயிலாக தெரிவித்து இருந்தனர்.

விமானப்படை & கப்பற்படை : 

அரசு அதிகளவில் நிதியை வழங்கவில்லை என்றால் சென்ற ஆண்டு கூறியது போன்று 2019-20 நிதியாண்டில் வாங்க உள்ளதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட  தளங்கள் மற்றும் உபகரணங்களுக்கு செலுத்த போதுமான நிதி இருக்காது எனக் கூறப்படுகிறது.

இந்திய ராணுவம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.எனினும், பொதுவாக படைகள் நிதி நெருக்கடியை எதிர்க் கொள்கின்றனர் ” என தன் பெயரை வெளியிட விரும்பாத பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரி கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் வெளியாகி உள்ளது.

Statue of unity  : 

குஜராத் நர்மதை நதிக்கரையில் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள  வளாகத்தில் அமைந்து உள்ள பகுதியில் பணிபுரியும் கூலித் தொழிலாளர்கள் மூன்று மாத ஊதியத்தை வழங்கவில்லை எனக் கூறி 100  பேர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மார்ச் 11, 2019-ல் வெளியாகியுள்ளது.

இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பது அரசு அறிந்து இருந்தாலும், அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்புத்துறை திறன்பட செயல்பட வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

Air force, navy stare at fund crunch next fiscal

HAL borrows Rs 1,000 crore to pay salaries, suffers lowest cash balance in 14 years

Govt-run TIFR pays only half the salary for February due to ‘insufficient funds’

BSNL Crisis Continues, Over 1.68 Lakh Employees Yet to Receive Salary

For second month in a row, Air India delays salaries

Statue of Unity: Salaries Not Paid For Three Months, Workers Go on Strike

 

Please complete the required fields.




Back to top button
loader