This article is from Oct 20, 2021

சிறந்த மருத்துவம், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் !

இந்திய கல்வி அமைச்சகத்தின் நேஷனல் இன்ஸ்டிடியூஷனல் ரேங்கிங் ஃப்ரேம்ஒர்க் இந்தியா ஆனது நாட்டில் உள்ள சிறந்த மருத்துவம், பொறியியல், சட்டம், ஆராய்ச்சி, மேலாண்மை கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவையின் தரவரிசையை ” இந்தியா ரேங்கிங் 2021 ” எனும் தலைப்பில் வெளியிட்டது.

இந்த பட்டியல்களில் சிறந்த மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட கல்லூரிகளின் பட்டியல்களில் அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகளே இடம்பெற்றுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள 50 சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் 10 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளது. வேலூர் கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் தரவரிசையில் 3-ம் இடத்தில் இடம்பெற்றுள்ளது. 10 சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையுடன் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு அடுத்தப்படியாக, கர்நாடகாவில் 9, டெல்லி 7 , மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தலா 4 மருத்துவக் கல்லூரிகளை கொண்டுள்ளன.

அதேபோல், இந்தியா முழுவதும் உள்ள 200 சிறந்த பொறியியல் கல்லூரிகளில் 36 தமிழ்நாட்டில் இருக்கிறது. பொறியியல் கல்லூரிகளை பொறுத்தவரையல் சென்னை ஐஐடி முதலிடம் வகிக்கிறது. மருத்துவம் போன்று சிறந்த பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ்நாடு அதிக எண்ணிக்கையுடன் முதலிடத்தில் இருக்கிறது.

சிறந்த பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டிற்கு அடுத்தப்படியாக, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 19 கல்லூரிகளும், தெலங்கானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 14 கல்லூரிகளும் உள்ளன.

30 சிறந்த சட்டக் கல்லூரிகளில், டெல்லியில் 4, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 3, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஒடிசாவிற்கு தலா 2, கேரளா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சிக்கிம், சண்டிகர், உத்தரகாண்ட், அசாம் தலா 1 கல்லூரிகளும் உள்ளன.

40 சிறந்த பல்மருத்துவக் கல்லூரிகளில், கர்நாடகா 12, தமிழ்நாடு 7, உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா 5, ஹரியானா 3, டெல்லி மற்றும் ஒடிசா 2, ஆந்திரா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், தெலங்கானா 1 ஆக உள்ளன.

100 சிறந்த பல்கலைக்கழங்களில், தமிழ்நாட்டில் 19, மகாராஷ்டிராவில் 12, கர்நாடகாவில் 10, உத்தரப் பிரதேசத்தில் 7, டெல்லியில் 6, பஞ்சாப் மற்றும் ஆந்திராவில் 5, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் 4, குஜராத், தெலங்கானா 3 என வரிசையாக உள்ளன.

75 சிறந்த பார்மசி கல்லூரிகளில், மகாராஷ்டிராவில் 12, தமிழ்நாடு மற்றும் பஞ்சாபில் 8, கர்நாடகாவில் 7, உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திராவில் 6, ராஜஸ்தான், குஜராத், தெலங்கானாவில் 4 மற்றும் ஹரியானாவில் 3 என்ற எண்ணிக்கையில் வரிசையாக உள்ளன.

50 சிறந்த ஆராய்ச்சிக் கல்லூரிகளில், தமிழ்நாட்டில் 8, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் 6, கர்நாடகா மற்றும் டெல்லியில் 5, உத்தரப் பிரதேசம் 4, பஞ்சாப் 3, ஒடிசா, மத்தியப் பிரதேசம், தெலங்கானாவில் 2 உள்ளன.

75 சிறந்த மேலாண்மை கல்லூரிகளில், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா 9, தமிழ்நாடு மற்றும் டெல்லி 7, பஞ்சாப் 5, ஜார்கண்ட், உத்தரகாண்ட், ஒடிசா தலா 4 , குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானாவில் தலா 3 கல்லூரிகள் உள்ளன.

25 சிறந்த கட்டிடக்கலை கல்லூரிகளில், தமிழ்நாட்டில் 4, பஞ்சாப் 3, கர்நாடகா, டெல்லி, மத்தியப் பிரதேசம், கேரளா , மேற்கு வங்கம் தலா 2, உத்தரப் பிரதேசம், ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், குஜராத், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தலா 1 கல்லூரி வீதம் உள்ளன.100 சிறந்த கல்லூரிகளில், தமிழ்நாட்டில் 33, டெல்லி 28, கேரளா 19, மேற்கு வங்கம் 5, மகாராஷ்டிரா 4, கர்நாடகா 3, குஜராத் 2, ஆந்திரா, ராஜஸ்தான், தெலங்கானா, பாண்டிச்சேரி, ஹரியானா, சண்டிகர் என தலா 1 கல்லூரி வீதம் இடம்பெற்றுள்ளது.

கல்வி அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில், ஒட்டுமொத்தமாக 100  சிறந்த கல்லூரிகளை பார்க்கையில் 19 தமிழ்நாட்டைச் சேர்ந்தவையாக இருக்கிறது. இப்படி சிறந்த கல்லூரிகளின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளே இடம்பெற்றுள்ளன.

Links : 

India Rankings 2021: Medical

India Rankings 2021: Engineering

Please complete the required fields.




Back to top button
loader