மார்ச் 1 முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாதா ?| இந்தியன் வங்கி அறிவிப்பால் குழப்பம்.

மார்ச் 1-ம் தேதி முதல் இந்தியன் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனையை நிறுத்த போவதாக சமூக வலைதளங்களில், சில செய்தி இணையதளங்களில் வெளியான தகவல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

காரணம், மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் முயற்சியாக வங்கிகள் 2000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை குறைத்து வருவதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இந்தியன் வங்கியின் அறிவிப்பிற்கு பின்னால் உள்ள காரணங்களை அறியாமல், தவறாக புரிந்து கொண்டதன் விளைவால் தவறான செய்திகள் பரவி உள்ளன.

இந்தியன் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில், ” ஏடிஎம்-களில் 2000 ரூபாய் நோட்டுகளைப் பெறும் வாடிக்கையாளர்கள் விற்பனை நிலையங்களில் சில்லறை மாற்ற சிரமப்படுகிறார்கள். வேறெங்கும் சில்லறை கிடைக்காத காரணத்தினால் சில்லறை மாற்றுவதற்கு வங்கியின் கிளைகளுக்கே வருகிறார்கள். தற்பொழுது வாடிக்கையாளர்கள் வங்கிகளைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையை தவிர்க்க, 01.03.2020 முதல் வங்கி ஏடிஎம்-களில் 2000 ரூபாய் நோட்டுகளை நிரப்ப வேண்டாம் ” எனக் கூறப்பட்டுள்ளது.

ஏடிஏம் இயந்திரங்களில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் 2000 ரூபாய் நோட்டுகளை மறுசுழற்சி செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக குறைந்த மதிப்பு கொண்ட 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை நிரப்பினால் போதும் எனக் கூறப்பட்டுள்ளது.

மக்கள் பண பரிவர்த்தனைக்காக வங்கிகளை நாடுவதை தவிர்க்கவே ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஏடிஎம் மையங்களில் 6,000 முதல் 8,000 வரையிலான தொகைகளை எடுத்தால் கூட 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வருகின்றன. அவற்றை சில்லறை மாற்றுவதில் மக்கள் சிரமம் அடைகின்றனர். இந்த சிக்கல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் தொடங்கி இருந்து வருகிறது எனக் கூறலாம்.

ஆக, காரணத்தை அறியாமல் இந்தியன் வங்கி ஏடிஎம்-களில் 2,000 ரூபாய் நோட்டுகளை நிரப்ப வேண்டாம் என கூறிய தகவலை திரித்து பரப்பி வருகிறார்கள். தவறான தகவலை பரப்பியதன் விளைவால் 2,000 ரூபாய் நோட்டுகள் மார்ச் முதல் செல்லாது என்ற பதற்றம் மக்களிடையே உருவாகி உள்ளது.

Links : 

Advertisement

Customers will no longer get Rs 2,000 currency notes at Indian Bank ATMs

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button