லக்கேஜ் பாலிசியில் கூடுதல் எடைக்கு கட்டணம் புதிதாக விதிக்கப்படவில்லை : இரயில்வே அமைச்சகம் !

கடந்த சில நாட்களுக்கு முன்பாக இரயில்களில் புதிய கட்டுப்பாடுகளின் படி பயணிகளின் வகுப்பைப் பொறுத்து 35 முதல் 70 கிலோவரை லக்கேஜை இலவசமாக கொண்டு செல்லலாம், கூடுதலாக கொண்டு செல்லும் லக்கேஜ்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும், இரயிலில் முன்பதிவு செய்யாமல் லக்கேஜ் கொண்டு செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சாதாராண கட்டணத்தை விட ஆறு மடங்கு அதிகம் வசூலிக்கப்படும் என இந்திய இரயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளதாக இந்திய அளவில் செய்திகள் வெளியாகின.

மே 29-ம் தேதி இரயில்வே அமைச்சகம் ட்விட்டர் பக்கத்தில், ” இரயில்களில் பயணிகள் அதிகப்படியான லக்கேஜை கொண்டு பயணிக்க வேண்டாம். கூடுதலாக லக்கேஜ் இருந்தால் பார்சல் அலுவலகத்திற்கு சென்று லக்கேஜை முன்பதிவு செய்யுங்கள் ” என பதிவிட்டு இருந்தது. இதன் பிறகு கூடுதல் லக்கேஜிற்கான கட்டணம் குறித்த தகவல்கள் வெளியாகத் தொடங்கியது.

ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ வரை லக்கேஜை இலவசமாக கொண்டு செல்லலாம், ஏசி 2-டயர் ஸ்லீப்பர் 50 கிலோ வரையிலும், ஏசி 3-டயர் ஸ்லீப்பர் வகுப்பில் 40 கிலோ வரையிலும், இரண்டாம் வகுப்பில் 35 கிலோ வரையிலும் இலவசமாக லக்கேஜை கொண்டு செல்லலாம். குறிப்பிட்ட எடைக்கு மேல் கொண்டு செல்லும் லக்கேஜ்களுக்கு குறைந்தபட்ச கட்டணமாக 30 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது எனக் கூறப்பட்டது.

Archive link 

இந்நிலையில், ” இரயில்வேயின் லக்கேஜ் பாலிசி சமீபத்தில் மாற்றப்பட்டதாக சில சமூக ஊடகங்கள்/ டிஜிட்டல் செய்தி தளங்களில் வெளியான செய்தி தவறானது. சமீப காலங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், தற்போதுள்ள லக்கேஜ் பாலிசி 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ளது என்றும் தெளிவுபடுத்தப்படுகிறது ” என இரயில்வே அமைச்சகம் ட்விட்டரில் விளக்கம் அளித்து உள்ளது.

Please complete the required fields.
Back to top button
loader